தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் கூட்டணி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாளை புதிய அமைச்சர்கள்: தவெக அரசில் தற்போது வரை 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், நாளை எஞ்சியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்வேஸ், பார்த்திபன், ரமேஷ் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி எம்எல்ஏ-வான நடிகர் ஸ்ரீநாத் அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீநாத் அமைச்சரா? நடிகர் ஸ்ரீநாத் விஜய்யின் நீண்டகால நண்பர். விஜய்யின் மிக மிக நெருங்கிய நண்பரான இவர் அவரின் ஆரம்பகால திரையுலகம் முதலே நண்பராக இருந்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தன்னையும் தவெக-வில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். அவருக்கு தூத்துக்குடியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தீவிர பரப்புரையில் ஈடுபட்ட ஸ்ரீநாத் முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் அவர்களின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்தே ஆவார். விஜய்யின் நெருங்கிய நண்பர்: 52 வயதான ஸ்ரீநாத் சென்னையில் பிறந்தவர். இவர் 1973ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்துள்ளார். விஜய்யின் கல்லூரி கால நண்பரான இவர் நாளைய தீர்ப்பு படத்திலே அவருக்கு நண்பராக நடித்து விஜய்யுடன் இணைந்து அவரும் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், மாண்புமிகு மாணவன் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்தார். பின்னர், 12 பி படத்தில் நடித்ததுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, காதல் வைரஸ், அலை, உள்ளம் கேட்குமே, வட்டாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம் ஆகிய படங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம் ஆனார். குட்டி, உத்தமபுத்திரன், ரெளத்திரம், மனம் கொத்தி பறவை ஆகிய படங்களிலும் இவரது நகைச்சுவை பிரபலம். விஜய்யுடன் இவர் வேட்டைக்காரன், மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார். ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகராக மட்டுமின்றி இயக்குனராக முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், லெக் பீஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் நடித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்பு: நடிகராகவும், விஜய்யின் நண்பராகவும் அறியப்பட்ட ஸ்ரீநாத் தவெக அலையால் தூத்துக்குடியில் வெற்றி பெற்றார். இவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவரது செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? இவர் களத்தில் எப்படி செயல்படப்போகிறார்? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் படிக்கவும்
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/





















