தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 23 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 24 மற்றும் 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.5 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]
A piece that brought a sense of order to a topic I had been finding chaotic, and a look at…
Honest assessment after reading this twice is that it holds up under careful attention, and a look at berrycovevendoratelier extended…
Strong recommendation from me, anyone curious about the topic should make time for this, and a look at chestnutharborcollective only…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…