கரூர் காணியாளம்பட்டியில் தமிழகத்தின் முதல்முறையாக மேற்கு திசை நோக்கி உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயத்தில் 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கருப்பு சுவாமி சிலை நிறுவப்பட்டது.

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அருகே உள்ள கோயில்பட்டி பகுதியில் பிரம்மாண்டமாக பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆலயத்தில் கிடாய் வெட்டி கருப்பசுவாமி 25 அடி சிலையை நிறுவப்பட்டது. மிகப்பெரிய அளவிலான கிரேன் வாகனத்தின் மூலம் சுமார் 50 டன் எடை கொண்ட கருப்பணசுவாமி சிலை பிரதிஷ்டையானது

அதன் தொடர்ச்சியாக பிரம்மாண்ட கருப்பண சுவாமிக்கு கையில் அருவாள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக பிரம்மாண்ட வண்ண மாலை, எலுமிச்சம் கனிமாலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்து, பட்டாடை உடுத்தி தொடர்ச்சியாக கருப்பண சுவாமி வாசலில் படையலிட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் மற்றும் ஆட்டுக்கறி மற்றும் அன்னம் படைக்கப்பட்டு மதுபானம், சுருட்டு உள்ளிட்ட பொருட்கள், கருப்பண சுவாமிக்கு பிடித்தமான உணவுகளை வைத்து படையல் இட்டு தொடர்ச்சியாக அருள்வாக்கு வந்தபடி ஆலயத்தின் பூசாரி காளிமுத்து சுவாமிக்கு மகா தீபாராதனை  காட்டினார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கருப்பண சுவாமிக்கு படையல் இட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கருப்பு சுவாமி பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பு – தமிழகத்தில் ஒரே கல்லினால் ஆன மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள கருப்பு சுவாமி கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 18-ஆம் படி கருப்பண சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை முதல் யாக வேள்வி நடைபெற்றது அதைத் தொடர்ந்து  காலை ஆகவேண்டி 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது அதன் பிறகு சாமி அந்தஸ்தை நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் அசைவிருந்து வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அருள்வாக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தையின்மை திருமண தடை தொழில் தடை மற்றும் பில்லி சூனியம் ஏவல் கண் திருஷ்டி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு காணப்படுவதாக நம்பப்படுகிறது என ஆலயத்தின் தலைவர் காளிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருப்பண்ண சுவாமி ஆலய தலைவர் மற்றும் பூசாரி காளிமுத்து புகைப்படம்

மேலும் பக்தர்கள் வசதிக்காக பிரத்யேகமாக காணியாளம்பட்டியில் இருந்து போக்குவரத்து வசதியும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் வரும் பக்தர்கள் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Source link

Latest News

View All

1. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

2. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed