<p>ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது.</p>
<p>மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை” என்று தெரிவித்தார். அப்போது சட்டப்பேரவையில் இருந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. </p>
<p> </p>
<p> </p>
TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!

