ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500 க்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 19 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர். இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 வாரங்களாக சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்‌ குழுவின்‌ மூலம்‌ மீனவர்‌ பிரச்சினையைத்‌ தீர்ப்பதற்கும்‌ இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ விடுவித்திடவும்‌ விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ கடிதம்‌ அனுப்பினார்.

இது தொடர்பான கடிதத்தில், சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள்‌ தொடர்ந்து இதுபோன்று இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும்‌, இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்‌ என்பதால்‌, இதில்‌ ஒன்றிய அரசு உடனடி கவனம்‌ செலுத்த வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டுள்ளதாகவும்‌ முதலமைச்சர்‌ தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning