தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் “பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க” என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல, இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையைக் கொடுக்க, அதை வாங்கி பிரித்த கல்யாணப் பெண் வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட, அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
“நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணியிருக்க” என்று அபிராமியைத் திட்டி வெளியே துரத்த, தீபா கண் கலங்கி நிற்கிறாள், அபிராமி “நீ கோயிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே” என்று தீபாவை திட்டுகிறாள். “இனிமே நீ நான் குடிக்க தண்ணி கூட கொடுக்க கூடாது” என்று ஆவேசப்படுகிறாள். இங்க நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கு தெரியவும் கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.
அனால், இங்கிருந்து இதைப் பார்த்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர், கார்த்திக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி “எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்க மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்யக் கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு” என்று சொல்ல, நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான்.
இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Vijay: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து சொன்ன ஷாருக் கான்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி
Actor Manikandan: ஆஸ்கர் மேடைல பேச 10 வருஷம் முன்னாடியே ரிகர்சல் செய்தேன்: மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்யம்!
மேலும் காண

























Если вы хотите надежно оградить свой участок, обратите внимание на [url=https://www.zabor-dlya-dachi-iz-proflista.ru/]металлический забор из профлиста на дачу цена[/url] — это оптимальное…