கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.

கர்பப்பை வாய் புற்றுநோய்

பொதுவாக, கர்ப்பவாய்  புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது HPV காரணமாகும். இது தொண்டை, பிறப்புறுப்பு மற்றும் தோலை பாதிக்கும். இது பொதுவாக உடலுறவு மூலம் பரவும் தொற்று ஆகும். உடலுறவில் சுறுசுறுப்பான நபர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில், அறிகுளிகளே இல்லாமல் இந்த  நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

2023ஆம் ஆண்டில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

இந்த நிலையில்,  கடந்த 2023ஆம் ஆண்டில் கர்ப்பவாய் புற்றுநோயால் தமிழ்நட்டில் 8,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் (ICMR-NCRP) படி, கடந்த 2023ஆம் ஆண்டில் நாட்டில் 3.4 லட்சம் பேர் கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 45,682 பேரும், மகாராஷ்ராவில் 30,414  பேரும் மேற்கு வங்கத்தில் 25,822 பேரும் கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 8,534 பேர் கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2014ல் 6,872 பேரும், 2015ல் 7,046 பேரும், 2016ல் 7,224 பேரும், 2017ல், 7,042 பேரும், 2018ல் 7,584 பேரும், 2019ல் 7,768 பேரும், 2020ல் 7,958 பேரும், 2021ல் 8,144 பேரும், 2022ல் 8,337 பேரும் கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பதலளித்திருக்கிறார்.

தடுப்பூசி யாரெல்லாம் பேடலாம்?

தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கர்ப்பவாய் புற்றுநோய் மட்டுமே. செர்வாவாக் எனப்படும் நாட்டின் முதல் HPV தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செர்வாவாக் (Cervavac)  என்பது இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும்.  9 வயது 24 வயதுடைய பெண்கள் செர்வாவாக் எனப்படும் HPV தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

மேலும், கார்டசில் (Gardasil)  என்ற தடுப்பூசி பெரும்பாலான புற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த தடுப்பூசியை 9 முதல் 45 வயதுடைய ஆண்கள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.   இந்த கார்டசில்  தடுப்பூசியை கர்ப்பவாய் புற்றுநோய்க்கும் பயன்படுத்தலாம் என்று பிரபல மருத்துவர் தன்யா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு டோஸ் கார்டசில் தடுப்பூசியின் விலை ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும். அதேபோல, இந்தியாவின் செர்வாவாக்  HPV தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரை இருக்கும் என்று மருத்துவர் தன்யா தெரிவித்துள்ளார்.

Source link

Latest News

View All

1. gabapentin for withdrawal from suboxone and yellow capsule identification g 2705 gabapentin does gabapentin give you headaches http://nou-rau.uem.br/nou-rau/zeus/auth.php?back=http://neuroreliefdirect.com&go=x&code=x&unit=x does gabapentin…

2. Если человек чувствует себя резко хуже, родственникам не следует делать домашние эксперименты с лекарствами. Необходимо вызвать врача или экстренную службу.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed