சேலம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவரது இல்லம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், சுதர்சன் பாபு என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சுதர்சன் பாபுவிற்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியுடன் சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் இருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். உடல் மோசமானதால் உடனடியாக சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினர். அப்போது உடனடியாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் வருகை தந்து பேசினார்.

இதனிடைய சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சுதாவின் உறவினர்கள், சுதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் மேயரின் மருமகள் சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கவில்லை, பட்டினி போட்டு உணவு வழங்காமல் இருந்ததால் இறந்ததாக தெரிவித்தனர். எனவே முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை அழைத்து வருவதற்கு அரசு 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாகவும், மாநகராட்சி மேயரின் மருமகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு என்ன நிலை என கேள்வி எழுப்பினர். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மனைவி, மகன், மகள் ஆகியோர் தான் கொடுமை செய்ததாக சுதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். எனவே முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் ஆகிய எனக்கு சுதர்சன் பாபு என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் நான் இருந்தபோது எனது மருமகள் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. உடனடியாக நான் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தேன் அங்கிருந்த மருத்துவர்கள் எனது மருமகள் இறந்ததை உறுதி செய்து என்னிடம் கூறினார்கள். பின்னர் சடலத்தை இல்லத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து வந்தேன் அப்போது எனக்கு ஒரு செய்தி வந்ததது. அதில் எனது மருமகளுடைய தம்பி மற்றும் அவரது உறவினர்கள் என்னை பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தவறான தகவலை பேட்டி தந்ததாக தெரியவந்தது. ஆனால் நான் எனது மகன் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் தான் அவர்களை பார்த்து கொண்டேன். மேற்படி எனது மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது சேலம் தனியார் மருத்துவமனையில் (எஸ்.கே.எஸ்) அவ்வபோது சிசிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அந்த பெண்ணுக்கு வெற்றிலை பாக்கு (தலை புகையிலை) பழக்கம் இருந்து வந்ததது. இதனால் உடல் நலம் கெட்டு நலிவடைந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இவ்வாறு இருந்து வந்த நிலையில், நானும் பொதுவாழ்வில் இருப்பதால் தனியாகவே இருந்து வந்தேன். எனது மருமகளின் குடும்பத்தினர் எனது பொது வாழ்விற்கும் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகிறார்கள் இதை பொருத்த வரை எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்புக்கு நானும் எனது குடும்பமும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சுதா உயிரிழந்த நிலையிலே சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மேலும் அவர்கள் கொடுத்த மருத்துவ அறிக்கையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
gioco online affari tuoi Feel free to visit my web blog … Giocare a Burraco
miglior roulette online My web-site sito casino
multi wheel numero roulette (https://www.mariquiromero.com/)
carte da burraco Here is my web-site: roulette quanti numeri ha – Cathern –
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

முதல்வர் விஜய், அமைச்சர்கள் குறித்து ஒருமையில் பேச்சு – திமுக MLA துரை.சந்திரசேகரன் சர்ச்சை | ACTPnews.com

‘நைட்டெல்லாம் தூங்க முடியல!’ – அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?, |“Couldn’t Sleep All Night!” – MLAs Voice Their Anguish in Assembly; What’s the Reason? | ACTPnews.com

பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி | ACTPnews.com

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் – காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க? | ACTPnews.com

esports best online Betting Apps site