சென்னை: மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 24 மணி நேரமும் செயல்படும் புதிய WhatsApp Chatbot வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

TNEB Chatbot என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி மூலம், மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் WhatsApp வாயிலாக பதிவு செய்யலாம்.

இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் தங்களது WhatsApp எண்ணிலிருந்து 94987 94987 என்ற எண்ணுக்கு “HI” என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

அதன்பின்னர், Chatbot மூலம் புகாரை பதிவு செய்வதற்குத் தேவையான விவரங்கள் பெறப்படும். நுகர்வோரின் மொபைல் எண் அல்லது மின் இணைப்பு எண்ணைப் பயன்படுத்தி புகார் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உடனடியாக அனுப்பப்படும்.

இதன் மூலம் மின்சார புகார்களை விரைவாக பதிவு செய்து, அவற்றை உரிய அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புகார்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதுடன், நுகர்வோர் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யவும், மின்சார சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார புகார் பதிவு செய்ய:

WhatsApp எண்: 94987 94987

WhatsApp-ல் “HI” என அனுப்பி மின்சார சேவை தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.

இந்த புதிய வசதி 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed