ஆர்.டி.ஐ விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். முதல்வர் விஜய்-யிடம் இந்த சட்டம் குறித்து சொல்லும்போது “இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால் நம் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை பெரிதாக வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்’ எனக் கூறி ஒப்புதல் பெற்றிருப்பார்கள். இவர் கருணாநிதி , ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடி போன்று ஆராய்ந்து அனுமதி கொடுத்திருக்க சாத்தியம் குறைவு. மேலும், இவருக்கு இந்தச் சட்டம் குறித்த போதுமான புரிதல் இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
எனவே, ஜான் ஆரோக்யசாமி போன்றோரின் வழிகாட்டுதலில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அதனால் நிர்வாகத் தடுமாற்றம் தொடர்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், அதன் எதிர்வினையை அரசு சந்திக்கும். ஏற்கெனவே அரசின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஆண்களிடம் அதிருப்தி நிலவுவதை காணமுடிகிறது. பெண்களிடம் இந்த அரசு நிர்வாகச் சிக்கல் சேர்வதற்கு இன்னும் காலம் எடுக்கும்.” என்றார்.
த. வெ. க தரப்பில் இது குறித்து நாம் பேசும் போது, ” நிர்வாக ரீதியாக பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. எனினும் அது எல்லாவற்றையும் கடந்து அரசு கொண்டுவரும் ஒரு திட்டத்திலோ ஒரு அறிவிப்பிலோ குறிப்பிட்ட அம்சம் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்குகிறது அல்லது எதிர் குரல் இருக்கிறது என்னும் விவகாரம் வரும்போது இந்த அரசு விரைந்து செயல்பட்டு அதற்கான தீர்வை காண்கிறது. எந்த நேரத்திலும், ‘நாம் கொண்டு வந்து விட்டோம்’ என்பதற்காக அந்தத் திட்டத்தை வலிந்து மக்களிடம் திணி ப்பது இல்லை. அதனால் சில விஷயங்கள் நிர்வாகக் குளறுபடி போல் தோன்றும். ஆனால் அடிப்படையில் மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதே அரசாங்கத்தின் முதல் பணி. அதன்படியே இந்த அரசு செயல்படுகிறது” என்கிறார்கள்.

























частный психиатрический стационар отзывы когда пора обращаться к психологу