’அதிமுகவும் திமுகவும் இணைந்து பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது’ - அமைச்சர் நிர்மல்குமார் | possibility that AIADMK DMK could join and contest alongside BJP" – Minister Nirmal Kumar.


விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கேஎன் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை விவகாரத்தில் எந்தப் பழிவாங்குதல் நடவடிக்கையும் கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது.

புகாரின் அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்கிறார்கள். அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி கைது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களைப் பற்றி அவதூறாக பொது மேடையில் தொடர்பில்லாமல் பேசியதால் விசாரணைக்காகத்தான் அழைத்துச் செல்லப்பட்டார். இது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு என்ன நடந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அது தொடர்பாக அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்”‘ என்றார்.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

தவெக ஆட்சி நீடிக்காது என திமுக அதிமுக சொல்வது தொடர்பான கேள்விக்கு, “இதில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து இருப்பது தெரிகிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியில் மாற்றம் இருக்காது. மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கூட்டணியில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்தத் தேர்தலிலும் எங்க கிட்டயே வர முடியாது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed