திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் காவி நிறம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது எக்ஸ் தளத்தில் திருவள்ளுவர் சனாதான பாரம்பரியத்தின் துறவி என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை… pic.twitter.com/wUuvMJ4q63
— M.K.Stalin (@mkstalin) January 16, 2024
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

























Felt mildly happier after reading, which sounds silly but is true, and a look at daisyharborgoodsstore extended that small mood…