தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் ‘கூரியர்’ (Courier) என்ற அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை உணர்கிறார் ஜெம்மா. அவரின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி நிஜ உலகைக் கைப்பற்றத் துடிக்கும் அசுர ஆன்மாக்களிடமிருந்து ஜெம்மாவும் அவரது மகளும் தப்பித்தார்களா, அவர்களுக்கு எலிஸ் எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே திகில் நிறைந்த திரைக்கதை.
























