Vishwa - Samanthi


‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா.

சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘சாமந்தி’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரிடம் உரையாடினோம்.

Vishwa – Samanthi

“நான் தற்காலிகமாக மீடியாவை விட்டு விலகி இருந்தது எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட காரணத்தினாலும் அல்ல. அது பல நிகழ்வுகளின் தொகுப்புதான். ஆனால் ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ‘நான் என்றைக்குமே சீரியலுக்கு எதிரானவன் அல்ல’.

ஒரு சின்ன மாற்றத்திற்காகவே சில காலம் விலகி இருக்க முடிவு செய்தேன். அந்தக் கொரோனா லாக்டவுன் சமயத்தில்தான் மீண்டும் நடிக்க வரலாம் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

வழக்கமாக ‘ஒருமுறை மீடியாவுக்குள் வந்துவிட்டால், நாம் எப்போதும் அங்கேயே இருக்கத்தான் தோன்றும்’ என்பார்கள். நானும் என்றைக்குமே கேமராவைவிட்டு ஒதுங்கியதில்லை. இந்த இடைவேளைக் காலம் என்னுடைய நடிப்புத் திறனை மெருகேற்ற எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.

இன்றைய அடுத்த தலைமுறைப் பிள்ளைகளும் ‘மெட்டி ஒலி’ சீரியலையும் அதன் பாடலையும் ரசிப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமிதமாக இருக்கிறது. சொல்லப்போனால், அதுவே நான் மீண்டும் திரைக்கு வருவதற்கான முக்கிய உந்துதலாகவும் இருந்தது.

இப்போது அந்த சீரியலுக்கு ரிப்பீட் வேல்யூ இருக்கிறது. ‘மெட்டி ஒலி 2’ பற்றிய பேச்சுகள் நடந்தபோது நான் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போதும் அதுபற்றிய பேச்சுகள் இருக்கின்றன. கூடிய விரைவில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பத்து வருடங்களுக்கு முன்பு ‘பொன்னுஞ்சல்’ சீரியலில் இருந்துதான் நான் பிரேக் எடுத்தேன். அந்த சீரியலில் என்னுடன் ஷமிதா நடித்திருந்தார். தற்போது நான் கம்பேக் கொடுத்திருக்கும் இந்த சீரியலிலும் ஷமிதாதான் என்னுடன் நடிக்கிறார்” என்றார்.

Vishwa - Samanthi
Vishwa – Samanthi

மேலும், சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். அதுபற்றி, “இப்போது என்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் மக்களுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன்.

அதில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டுவதை விட, சமூக அக்கறை கொண்ட அல்லது ஆழமான கருத்துகளை வழங்கவே நான் விரும்புகிறேன். வருமானத்தைத் தாண்டி அந்த சேனலில் நான் நல்ல கண்டெண்ட் கொடுத்துவிட வேண்டும் என்றே விரும்புவேன்” எனப் பகிர்ந்துகொண்டார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed