Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா! | Nivin Pauly - Mamitha Baiju starrer Bethlehem Kudumba Unit Malayalam Movie Review


Bethlehem Kudumba Unit Review

Bethlehem Kudumba Unit Review

மதிப்பும் மரியாதையும் மிக்கவராக வலம் வந்தாலும், ஆங்காங்கே வெளிப்படும் க்யூட் குழந்தைத்தனத்துடன் நிவின் பாலி, படம் முழுக்க நிறைந்து கிடக்கிறார். முதிர்ச்சியான நடிப்பு, கோபத்தின் வெளிப்பாடு தாண்டி, வெட்கப்படும் தருணங்கள்… அழகு சேட்டா! துடிப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக மனதில் நிறைகிறார் மமிதா பைஜு. நிவினைச் சீண்டும் இடங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள், குடும்பத்தின் பிளாக்மெயிலுக்கு கலங்கும் இடம் போன்றவற்றில் எமோஷன்களிலும் அட்டகாசப்படுத்துகிறார்.

நிவினின் சகோதரராக சங்கீத் பிரதாப் தன் வழக்கமான காமெடி கவுன்ட்டர்களாலும் உடல்மொழியாலும் அதகளப்படுத்துகிறார். இயக்குநராக அவர் கூட்டும் அலப்பறைகள் ரகளை! நிவினின் சீனியர் நண்பர்களில் மது பிரியராக சுரேஷ் கிருஷ்ணா காமெடி கதகளி ஆட, க்ளிக்சனாக ரோஷன் ஷானவாஸ், கோபக்காரராக தன் ‘பிரேமலு’ பாத்திரத்தை மீண்டும் பிரதிபலிக்கும் ஷ்யாம் மோகன் ஆகியோர் படத்துக்கு கலகலப்பூட்டுகின்றனர். வினய் ஃபோர்ட், ஷ்ரிந்தா உள்ளிட்ட மற்ற துணை கதாபாத்திரங்களும் இந்த குடும்ப யூனிட்டின் முக்கிய அங்கங்களாகின்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed