த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா? என தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு…
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கட்சியினர் நம்பிக்கை…


ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட த.வெ.க. நிர்வாகி, இரவில் திடீரென கைது…
சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், கட்சியின் நடவடிக்கையைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை…


முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அரசியல் காட்சிகள் இருக்குமா, இருக்காதா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு…


நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது செல்லும்…
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு…


தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு…
இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக ரத்னா நியமனம்…

Read more 14.07.2026 தலைப்புச் செய்திகள் – Headlines | actpnews.com – ACTP news Tamil


கன்னட அமைப்புகள் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்…
மேகதாது அணை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், கர்நாடக அமைப்புகள் போராட்டம்…


கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா?
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது…
‘வேர்ல்டு லீக்ஸ்’ என்ற ஹேக்கர் குழு தகவல்களை வெளியிட்டதாக கூறிய நிலையில், இந்திய அணுசக்தி ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது…


பழனி முருகன் கோவில் நில முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியவர் கைது!
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய மேலும் 2 பேருக்கு வலைவீச்சு…

15.07.2026 தலைப்புச் செய்திகள் – Headlines | actpnews.com – ACTP news Tamil


பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டிருப்பதால், இது மிகப்பெரிய ஊழல் என்று கருத்து…


உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்…
செல்போன் உற்பத்தி, செமிகண்டக்டர் உள்ளிட்ட 7 முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்…


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அந்நாட்டு ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி…
விலைவாசி உயர்வு, அடிப்படை உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராவல்கட் நகரில் நடைபெற்ற போராட்டம், ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால் கலவர பூமியாக மாறியதால் பரபரப்பு…


மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக 754 பேர் பலி…
எபோலா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தொற்று மேலும் பரவும் ஆபத்து…


பிபா கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா…
அர்ஜென்டினாவின் லவ்தாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல்கள் அடித்ததால், ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி…
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது…

 

Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports