அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடல், பின்னர் வந்தே மாதரம், இறுதியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளுக்கான புதிய நடைமுறை அறிவிப்பு

அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டிய வரிசை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more : கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியும்” – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு

முதலில் மாநிலப் பாடல், இறுதியில் தேசிய கீதம்

புதிய நடைமுறையின்படி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் அந்த மாநிலத்தின் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலான “வந்தே மாதரம்” இடம்பெற வேண்டும். நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமான “ஜன கண மன” இசைக்கப்பட அல்லது பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பை பின்பற்ற அறிவுறுத்தல்

வந்தே மாதரம் பாடல் மற்றும் தேசிய கீதம் பாடப்படும் போது, அவற்றின் அசல் வரிகள் மற்றும் சரியான உச்சரிப்பு முறைகள் துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Read more : 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் ஆபத்து – அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

எந்த நிகழ்வுகளில் கட்டாயம்?

தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் எந்த நிகழ்வுகளில் கட்டாயமாக இடம்பெற வேண்டும், எந்த நிகழ்வுகளில் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறலாம் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு உத்தரவு

இந்த புதிய வழிமுறைகள் அனைத்து அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்புகளில் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

#StateSong #NationalAnthem #VandeMataram #JanaGanaMana #MHA #GovernmentGuidelines #India #BreakingNews #TamilNews #ACTPNews

Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News


  1. Get4Games Avatar

    Eline sağlık, faydalı olmuş.

Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed