2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  - Kumudam

2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் எம்.அப்பாவு தொடந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ததில், திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். 19, 20, 21 சுற்றுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கண்ட்ரோல் யூனிட்டுகளையும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed