"எனக்குச் சாமி பக்தி அதிகம்!" - 'கருப்பு' இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி |"I have deep faith in God!" — 'Karuppu' Director R.J. Balaji

செய்தியாளர்களிடையே ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “எனக்குச் சாமி பக்தி அதிகம். எல்லாருக்கும், ரெண்டு படம்தான் பண்ணியிருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணல.

ரெண்டு சாமி படம் பண்ணியிருக்கேன். நல்ல படம் பண்ணினால் மனசுல நின்னுடும்னு நினைக்கிறேன். நிறைய மற்ற கதைகளும் இருக்கு. இப்போ சாமி படம் பண்ணதுல எனக்குச் சந்தோஷம்தான்.

கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச் சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்குக் கிடையாது. எந்த ஊரா இருந்தாலும், ஊரை விட்டு வெளிய போகும் போதோ, ஊருக்கு வரும் போதோ கருப்பசாமியை வணங்கிட்டுதான் போவாங்க.

ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி

அப்படி மக்கள் அனைவரும் அவங்களுடைய சாமியாக நினைச்சுப் படத்தை வந்து பார்த்து, கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.” என்றவர், “ஃபேமிலி ஆடியன்ஸுக்காகதான் படம் பண்ணினேன்.

விமர்சனம் பண்றவங்களுக்கு, ஆன்லைன்ல இருக்கிறவங்களுக்காக நான் படம் பண்ணல. நான் படம் ரிலீஸ்க்கு முன்னாடியே இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தேன். இது மக்களுக்குப் பண்ணின படம்.

அதனால, மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சில பேர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டர்ல சாமி ஆடுறதுக்கு ஆள் அனுப்பிடுவாங்கனு சொன்னாங்க.

எங்களாலேயே இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பியிருக்க முடியாது. மக்களே இந்த படத்தை அவங்க படமா நினைச்சுக் கொண்டாடுறதுதான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கு.” எனக் கூறியிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Закажите бесплатный аудит вашего сайта прямо сейчас и узнайте какие поведенческие факторы мешают вам выйти в ТОП Яндекса. Наши специалисты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed