தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து நாட்டை புணரமைக்க தயார் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கையில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.

விஜய்யின் வெற்றியை இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, அங்கு உள்ள சிங்களவர்களும் கொண்டாடினர். நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் பலர், ஆதரவு கருத்துக்களை தெரிவித்த‍து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

விஜய்க்கு இந்தியாவை தாண்டி, இலங்கையில் பெரும் ஆதரவு இருப்பதால்தான், அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே பேசினார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச, விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்பி C.B.ரத்னயாகே செய்தியாளர்களிடம் பேசியபோது, விஜய்யுடன் இணைந்து பணியாற்றி, தேசத்தை புணரமைக்கும் பொறுப்பை ஏற்க உள்ளதாக, எம்.பி. நமல் ராஜபக்ச தெறிவித்துள்ளதாக கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports