பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான் அரசு நேரடியாக நிர்வாகம் செய்து வருகிறது. இருந்தாலும், அவை இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று இந்தியாவின் வரைபடம் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிப்பட தெரிவித்து வருகிறது.

ரஷ்யா, இஸ்ரேல் போன்ற இந்தியாவுக்கு நெருக்கமான நாடுகள், இந்தியாவின் வரைபடத்தை அங்கீகரித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கம் என்று ஏற்றுக்கொண்டாலும், உலக வல்ல‍ரசுகளில் ஒன்றான அமெரிக்கா, இதுவரை ஏற்காமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் வரைபடைத்தை முழுமையாக பகிர்ந்துள்ளது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவின் ஒரு அங்கம் என்றே மேப் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

முதன்முறையாக இந்தியாவின் ஒரு அங்கம்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று ஒப்புக்கொண்டுள்ளதால், இது மோடி அரசின் ராஜதந்திரம் வெற்றி அடைந்துள்ளது என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கும், மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில், இதற்கு பாகிஸ்தான் அரசு எந்தமாதிரியான பதில் அளிக்கும் என்று தெரியவில்லை. அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் பழைய வரைபடத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்தியாவை எதிர்த்து அமெரிக்காவால் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.

 

இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வர்த்தகப்போர், usa, pojk, pok, pakistan, india, modi, trump, map, டிரம்ப், மோடி,