மும்பையில் துப்பாக்கி முனையில் நகைக்கடைக்குள் புகுந்து ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பிரதான பகுதியான நவி மும்பையில் கர்கார் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நேற்று இரவு 9.57 மணியளவில் கடைக்குள் ஒரு கும்பல் புகுந்தது.
தலைக்கவசம் அணிந்துகொண்டு, முகத்தில் முகக்கவசம் அணிந்திருந்த 3 பேர், துப்பாக்கியை காட்டி, கடையில் இருந்தவர்களை மிரட்டினர். பின்னர், அவர்களை கைகளை மேலே தூக்க சொல்லி, துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு மிரட்டினர்.
https://x.com/AnbilChinna/status/1817748498701312324
பின்னர், ஒருவர் பின் ஒருவராக நகைகளை அள்ளிக்கொண்டு இருந்த போது, இடையிடையே துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு மிரட்டல் விடுத்த கும்பல், நகைகளை பையில் அள்ளிக் கொண்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கில் தப்பியது.
மூன்று பேரும் ஒரே பைக்கில் ஏறி சென்றதை சாலையில் இருந்தவர்களும் வீடியோ எடுத்துள்ளனர். அங்கிருந்த தப்பிச் சென்ற கும்பல், துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்திக்கொண்டே வேகமாக சென்றது.
கடையில் இருந்தவர்கள் பின்னால் துரத்திச் சென்ற போதும், கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. சிசிடிவியில் பதிவான காட்சி மற்றும் சாலையில் இருந்தவர்கள் எடுத்த வீடியோக்கள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்பட பாணியில் துப்பாக்கிகளை காட்டி நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…