அம்பேத்கர் பிறந்தாளில் சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

India is on the brink of the most critical election in its history!It is the solemn duty of every citizen to safeguard the beacon of democracy ignited by the revolutionary Dr. B.R. Ambedkar.The BJP is perilously intent on dismantling the Constitution. With a voracious… pic.twitter.com/IkSfeO9K8h
— M.K.Stalin (@mkstalin) April 14, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். 
அம்பேத்கரின் பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அம்பேத்கர் பிறந்தாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றனர். 

 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed