7 am headlines today 2024 7th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர்; புதிய தேர்தல் ஆணையள தேர்வு -பிரதமர் தலைமையில் கூட்டம்

தமிழ்நாடு

அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் சென்னை வந்தடையவுள்ளார்.
இன்று டெல்லி செல்கின்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு 
அரசுப் பேருந்துகளை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மக்களுக்கான சங்கம் அமைக்கப்பட வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தியா

அஜித் பவாரின் கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. 
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட சரத் பவார் முடிவு
நாடு முழுவதும் இதுவரை 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா
ஒரே பாரதம் சிறந்த பாரதத்திற்கு கோவா சிறந்த எடுத்துக்காட்டு; பிரதமர் மோடி பேச்சு
புதிய தேர்தல் ஆணையாளரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டம். இந்திய தேர்தல் ஆணையாளராக பதவி வகிக்கும் அனூப் சந்திரா பாண்டேவின் பதவி காலம் வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைகிறது.
மம்தா பானர்ஜி ‘I.N.D.I.A’ கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளார் – ராகுல் காந்தி பேச்சு
மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து; 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு ஆணை
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், முதல் கட்டமாக உத்திரகாண்ட் அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. 

உலகம்

சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர் –  ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி
தேர்தல் முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து டிரம்ப் விலக்கு கோர முடியாது – அமெரிக்க கோர்ட்டு திட்டவட்டம்
ரஷ்யாவுக்கு போருக்கு தயாராக இருக்கிறோம் – போலந்து அதிரடி அறிவிப்பு
கனடாவில் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது

விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
டி.என்.பி.எல் 2024க்கான ஏலம் இன்று நடைபெறுகின்றது. 
ப்ரோ கபடி லீக்; உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி; ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் ஜிம்பாப்வேவுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடச் செல்கின்றது இந்தியா

Published at : 07 Feb 2024 07:01 AM (IST)

மேலும் காண

Source link