3 யூனிட் ஃபேக்டரி, 30 பேருக்கு வேலை!கடனில் தள்ளிய‌ பெரும் விபத்திலிருந்து மீண்ட நடிகை சாய் காயத்ரி!


நடிகை சாய் காயத்ரியை நினைவிருக்கிறதா? ‘கனா காணும் காலங்கள்’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ‘ஈரமான ரோஜாவே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். சமீபமாக இவரை சீரியல்களில் பார்க்க முடியவில்லை.

பிசினஸில் பிஸியாகி விட்டார் எனத் தகவல் கிடைக்க, தேடிப் பிடித்துப் பேசினோம்.

”நடிக்கத் தொடங்கி பதினைஞ்சு வருஷம் இருக்கும். ஆனா இதுவரைக்கும் விஜய் டிவி சீரியல்களில் மட்டும்தான் நடிச்சிருக்கேன். மத்த சேனல்கள்ல வாய்ப்பு வந்த போதும் ஏனோ தெரியல, போகத் தோணலை.

நடிப்பு தாண்டி டான்ஸ் ரொம்பவே பிடிச்ச விஷயமா இருந்ததால், சைடுல ஒரு விருப்பமுள்ள விஷயமா இருக்கட்டுமேன்னு சில வருஷங்களூக்கு முன்னாடி டான்ஸ் ஸ்டூடியோ ஒண்ணு தொடங்கி நடத்திட்டிருந்தேன்.

விஜய் டிவி தொடர்ந்து சீரியல் வாய்ப்பு தந்து வந்த போதும், சீரியலை மட்டுமே நம்பி இருக்க வேண்டாமேனு இதைப் பண்ணிட்டிருந்தேன். ஒருகட்டத்துல டான்ஸ் ஸ்டூடியோ தாண்டி ஃபிட்னஸ், ஈவென்ட் மேனேஜ்மென்ட்னு அதை டெவலப் பண்ணினேன்.

இந்தச் சூழல்லதான் எதிர்பாராதவிதமா ஸ்டூடியோவுல தீ விபத்து. ஏசியில பிரச்னை உண்டாகி அது வெடிச்சு தீ பிடிச்சு மொத்த ஸ்டூடியோவும் பாழாகிடுச்சு.

முப்பது லட்ச ரூபாய் நஷ்டம்.

sai gayathri

கடன் போட்டு அழுத்தத் தொடங்கிடுச்சு. வட்டி மட்டுமே ரெண்டு லட்சம் கட்ட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.

சைடுல பிசினஸ் பண்ணலாம்கிற ஆசையே விட்டுப் போய் திரும்பவும் சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

கொஞ்சம் மீளத் தொடங்க, அதுக்குள்ள கொரோனோ வந்துடுச்சு.

சீரியல் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட, அந்தச் சமயத்துல இஷ்டமில்லாம தள்ளப்பட்டு இறங்கின பிசினஸ்தான் இப்போதைய ‘சாய் சீக்ரெட்ஸ்’. ஜீரோ இன்வெஸ்ட்மென்ட்ல தொடங்க வேண்டிய நிர்பந்தம். ஹோம் மேட் புராடக்ட்டா ஸ்கின் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களைத் தயாரிச்சோம்.

தரத்துல சமரசம் செய்துக்கம கொடுத்ததால் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. கடனை அடைக்க இந்த தொழில் கொஞ்சம் உதவியதால் அதிக கவனத்தை இதுலயே செலுத்தினதுல, சின்னத்திரை என்னை மறந்துடுச்சு. அல்லது அவங்க பிசினஸ்ல பிஸியாகிட்டாங்கனு நினைச்சு விட்டுடுச்சு.

ஆனா இன்னைக்கும் சீரியலை விட்டு ஒதுங்கணும்னு நான் நினைக்கவே இல்ல.

ரெண்டு மூணு வருஷம் கடுமையான உழைப்பைப் போட்டதுல இருந்த கடன் சுமை கொஞ்சம் குறைய, இன்னொருபுறம் பிசினஸை இன்னும் விரிவாக்கம் செய்தேன்.

இந்த வருஷம் புதுசா ஆர்கானிக் பொருட்கள், பொட்டிக் கலெக்ஷன் ரெண்டும் கொண்டு வந்திருக்கோம். ஆர்கானிக் பொருட்களில் நாட்டு மாடு நெய், மலைத்தேன், மூலிகை பானங்கள் உள்ளிட்டவை கிடைக்கச் செய்றோம்.

sai gayathri

ஃபேக்டரி 3 யூனிட் ரன் ஆகுது. முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வர்றவங்களா இருக்காங்க. நேரடியாக சுமார் முப்பது பேருக்கு வேலை வாய்ப்பு தந்திட்டிருக்கேன்.

அன்னைக்கு கையில இருந்த காசெல்லாம் காலியாகி கடன்காரியா நின்ன தருணத்தை நினைச்சா இப்பவும் ஒரு நொடி பகீர்னு இருக்கும்.

ஆனா மனசைத் தளர விடாம உழைச்ச உழைப்பு என்னை ஓட வச்சது. இப்ப அந்த பிசினஸை வெற்றிகரமா செஞ்சிட்டிருக்கேன். கூடவே சீரியல், ஒ.டி.டி எந்த வாய்ப்புன்னாலும் நடிக்கவும் தயாராகவே இருக்கேன். சிலர் நான் பிசினஸ்ல இறங்கிட்டதால நடிப்பை விட்டுட்டேன்னு தப்பா புரிஞ்சிருக்காங்கனு நினைக்கேன். அப்படி இல்ல.

பிரச்னை வர்றப்ப வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு நினைக்கிற யாராவது இருந்தா தயவு செய்து எண்ணத்தை மாத்திக்கோங்க. எதுவும் கடந்து போகும்கிறதுதான் வாழ்க்கை” என்கிறார் கூலாக.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Котлотрейд https://kotlotrade.ru надежный поставщик промышленного оборудования в Новосибирске. В нашем ассортименте: водогрейные котлы, горелки. Гарантируем качество и выгодные условия. Звоните!

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed