ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறிய முக்கிய அறிவிப்பு…
திமுக விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள நிலையில், இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு…
