Month: February 2024

  • Pakistan Players Iftikhar Ahmed Apologises After On-field Spat With Asad Shafiq Sindhu Premier
    Pakistan Players Iftikhar Ahmed Apologises After On-field Spat With Asad Shafiq Sindhu Premier

    சிந்து ப்ரீமியர் லீக்:
    பாகிஸ்தானில் சிந்து ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் காரச்சி ஹாசிஸ்  மற்றும் லார்கானா சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இந்த  போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 8-வது ஓவரை கராச்சி ஹாசிஸ் சுழற்பந்து வீச்சாளர் இப்திகார் அகமது வீசினார். அவர் வீசிய இந்த ஓவரில் லார்கான் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் ஆசாத் ஷபிக் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

    Iftikhar Ahmed got aggressive with Asad ShafiqWas this a bit on the unprofessional side? Who’s wrong here? #Iftimania pic.twitter.com/QIqDGdcFSl
    — Alisha Imran (@Alishaimran111) January 31, 2024

    அவரது விக்கெட்டை எடுத்த பின்னர் இப்திகார் அகமது ஆசாத்தை நோக்கி சைகை காட்டினார். ஆனால், அதை கண்டுகொள்ளாத ஆசாத் ஷபிக் இப்திகாரை நோக்கி நகர்ந்தார். அப்போது இப்திகார் அகமது கோவமாக இருந்தார். இதனிடையே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. இதனைக்கண்ட நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இச்சூழலில், இப்திகார் அகமதுவின் செயல்பாட்டை கண்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் களத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினர்.
    மன்னிப்பு கேட்ட இப்திகார் அகமது:
    இந்நிலையில், இப்திகார் அகமது தன்னுடைய நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “களத்தில் அவ்வாறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நான் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றியிருக்கக்கூடாது. போட்டிக்கு பின்னர் நான் தனிப்பட்ட முறையில் ஆசாத் ஷபிக் பாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

    I am extremely apologetic for my behaviour in the field today. I shouldn’t have reacted the way I did in the heat of the moment. I’ve apologised to @asadshafiq1986 Bhai in person after the match & have always held great regards for him. We have played a lot of cricket together.
    — Iftikhar Ahmad (@IftiMania) January 31, 2024


    அவர் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
    மேலும் படிக்க: Viral Video: சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது; சகோதரர் குறித்து பேசிய U-19 நாயகன் முசீர் கான்!
    மேலும் படிக்க: ICC Test Rankings: டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

    Source link

  • Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors
    Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors


    இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள மோடி அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.
    பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு கிடைத்தது என்ன?
    இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 
    கடந்த 25 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேத்துறையை நவீனப்படுத்துவதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    மூன்று பெரிய ரயில்வே பொருளாதார வழித்தடங்கள்:
    பட்ஜெட் தாக்கலின்போது, இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மூன்று பெரிய ரயில்வே பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்படும். ஆற்றல், கனிமம் மற்றும் சிமெண்ட் வழித்தடம், துறைமுக இணைப்பு வழித்தடம், அதிக போக்குவரத்து  வழித்தடம் ஆகியவை அமைக்கப்படும்.
    பிரதம மந்திரி கதி சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் பல தரப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை செயல்படுத்துவதற்காக ரயில்வே திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, அதற்கான செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஜிடிபி வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
    அதிக போக்குவரத்து வழித்தடங்களில் நெரிசல் குறைவதால், செயல்பாடுகள் மேம்படும். இதன் விளைவாக பயணிகளுக்கு பாதுகாப்பு மேம்படும். பயணிகள் விரைவாக பயணிப்பார்கள். பயணிகளின் வசதிக்காக 4,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்” என்றார்.
    கடந்த 2023-24 பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரயில்வே துறைக்கு 1.6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், முதலீடுகள் மூலம் ரயில்வே துறைக்கு 2.45 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. 2023-24 ஆண்டு, பட்ஜெட்டை தாண்டி ரயில்வேத்துறைக்கு மத்திய அரசு மொத்தமாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. மொத்த முதலீடுகள் மூலம் ரயில்வேத்துறைக்கு 2.6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.
    இதையும் படிக்க: Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

    மேலும் காண

    Source link

  • Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
    Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!


    Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!

    Source link

  • Udhaynidhi Stalin Reaction About Central Budget 2024 | Udhaynidhi Stalin: மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்
    Udhaynidhi Stalin Reaction About Central Budget 2024 | Udhaynidhi Stalin: மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 
    அல்வா கிண்டியுள்ளனர்:
    இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ”ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி” என தெரிவித்துள்ளார். 

    ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக்…
    — Udhay (@Udhaystalin) February 1, 2024

    இல்லா நிலை:
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, “ கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை! இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. 
    மகளிர், இளைஞர், உழவர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினரையும் ‘நான்கு சாதிகள்’  என்று குறிப்பிட்டு, பட்ஜெட் உரையிலேயே நால்வருணக் கோட்பாட்டை நிதியமைச்சர் அவர்கள் திணித்திருப்பது பிற்போக்குத்தனமானது! கண்டனத்திற்குரியது! இதன் மூலம் பா.ஜ.க.வின் ‘சமூகநீதி’ எத்தகையது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இவர்களால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது! புதிய இந்தியாவை I.N.D.I.A கூட்டணிதான் உருவாக்கும்” எனவும் கூறியுள்ளார்.
    அதேபோல் திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா, “ 2024 ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அவர்களின் ஒட்டுமொத்த ஆட்சியே மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இல்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் வரவிருக்க கூடிய தேர்தலில் ஒரு நல்ல அரசு உருவாவதற்கான தீர்ப்பை தருவார்கள்” என தெரிவித்துள்ளார். 
     

    மேலும் காண

    Source link

  • Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody
    Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody


    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் இன்று அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி, அடுத்த ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியுள்ளார்.  பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து முதலமைச்சர் இல்லாத நிலையில் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசியுள்ளார் சம்பாய் சோரன். 
    உரிமை கோரிய சம்பாய் சோரன்:
    ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களுடன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் கூட்டணியில் இருக்கும் 43 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
    ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சம்பாய் சோரன், “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் 43 எம்எல்ஏக்களும் சர்க்யூட் ஹவுஸில் (மாநில அரசு விருந்தினர் மாளிகை) தங்கியுள்ளனர். எங்கள் கோரிக்கை மீது விரைவில் முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்” என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு விழா  நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 
    ரிசார்ட் அரசியல்?
    இதற்கிடையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், சம்பாய் சோரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுமட்டும் இல்லாமல் ஜார்கண்டில் ரிசார்ட் அரசியல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஜார்கண்ட் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றது. இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விமானம் மூலமாக ஹைதரபாத் அழைத்துச் சென்றுள்ளனர்.
    முதலமைச்சராக இருந்த் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் அரசாங்கம் இல்லை என்ற குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜே.எம்.எம்-ன் சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்பை சோரன் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் பதவி விலகியதும், மத்திய ஏஜென்சியால் கைது செய்யப்பட்டதை முன்கூட்டியே கணித்திருந்ததால் இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் ஜார்க்கண்டில் நடந்தேறியுள்ளது. 
    முன்னதாக ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதேநேரத்தில், ஹேமந்த் சோரன் ஏற்கனவே தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

    Jharkhand CM Soren: பாய்கிறது கைது நடவடிக்கை? மனைவியை வைத்து புது திட்டம் தீட்டும் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன்! சிக்கல் என்ன?
    Hemant Soren: கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

    மேலும் காண

    Source link

  • KPY bala has hepled needless people with 5th ambulance and gives a perfect reply to all haters
    KPY bala has hepled needless people with 5th ambulance and gives a perfect reply to all haters


    விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல திறமைகளை உள்ளடக்கிய பாலா தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சின்னத்திரையில் கலக்கிய பாலா ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் முன்னேறியுள்ளார்.   
     

    மனிதாபிமானமுள்ள மனிதர்:
    பாலா எந்த அளவுக்கு ஒரு நல்ல நடிகர் என்டர்டெயினராக இருக்கிறாரோ அதை விட பன்மடங்கு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் என்பதை அவரின் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்து ஏராளமான ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல குழந்தைகளின் படிப்பிற்கு, முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்வதுடன் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர உதவிக்காக தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார்.  
    பல மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தருணத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது 5வது ஆம்புலன்ஸை வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை எனும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் வழங்கியுள்ளார். நடிகர் பாலாவுக்கு அந்த ஊர் மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர். 
     

    ஆம்புலன்ஸ் வசதி:
    பாலா இப்படி செய்வதற்கு பின்னர் யாரோ இருக்கிறார்? என்ற குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளிக்கையில் இந்த மலை கிராமத்தில் மொத்தம் 172 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். கர்ப்பிணி பெண்களை கயிறு கட்டி தான் கீழே இறக்குவார்களாம். அதிலும் சில பெண்களுக்கு வழியிலேயே பிரசவமாகிவிடும் கொடுமைகளும் நிகழுமாம். இந்த கிராமத்துக்கு மேல ஏறி வருவதே மிகவும் சிரமமாக இருக்கிறது. அதனால் தான் இவர்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன். 
    அதே மாதிரி எனக்கு பின்னாடி யாரு இருக்காங்க அப்படினு சோசியல் மீடியாவில் எல்லாம் கமெண்ட் போடுறாங்க. ஆமா எனக்கு பின்னாடி இருக்காங்க தான். அது தான் அவமானமும், கஷ்டமும். சில பேர் என்னை  கமெண்ட்ஸ் மூலம் திட்ட கூட செய்றாங்க. எதிர்காலத்துல நீ பிச்சை தான் எடுக்க போற அப்படினு எல்லாம் சொல்றாங்க. அப்போ உனக்கு நான் பிச்சை கூட போமாட்டேன் அப்படினு எல்லாம் திட்டுறாங்க. அவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். எதிர்காலத்துல நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. நான் பிச்சை எடுக்குற அதே சிக்னல்ல தான் நான் வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸும் வந்து நிக்கும்” என சரியான பதிலடி ஒன்றை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார் நடிகர் பாலா.   

    மேலும் காண

    Source link

  • 109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |
    109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |


    Maharastra School: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
    100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஷஹாபூர் தாலுகாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (பழங்குடி குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளி) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    இவர்களுக்கு நேற்று மதிய உணவு வெளி ஹோட்டலில் இருந்து வழங்கப்பட்டது. பட்சாய் கிராமவாசி ஒருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியில் இருந்து மாணவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது.  மாணவர்களுக்கு புலாவ் மற்றும் இனிப்பு உணவான குலாப் ஜாமூன் வழங்கப்பட்டது.
    இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால், பள்ளி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 109 மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஏழு மாணவர்களுக்கு  மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    இதனை அடுத்து, அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வழக்குப்பதிவு:
    இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக் கண்காணிப்பாளர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வெளியில் இருந்து உணவு கொண்டு வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 109 மாணவர்களில், ஏழு பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
    குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முன்னதாக, பீகார் மாநிலம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்து கிடந்த நிலையில் சத்துணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    GST Collection January: பட்ஜெட் தாக்கமா? – 2வது புதிய உச்சம்..! ஜனவரி மாதத்தில் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்
    Education Budget 2024: புதிய மருத்துவ கல்லூரிகள்.. அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    மேலும் காண

    Source link

  • Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”
    Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”


    Prakash Raj: மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. 
     
    பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து:
     
    தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், அரசியல் கருத்துகளை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
     
    மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறும் சில கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அந்த வகையில், ராமர் கோவில் குறித்து பிரகாஷ் ராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேர்க்காணல் ஒன்றில் பேசிய அவர், “ மசூதியை தோண்டினால் கோயில்கள் தெரியும் என்றால், கோயில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்” என பேசியுள்ளார். 


    மசூதியை தோண்டினால்கோவில்கள் தெரியும் என்றால்கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்பிரகாஷ் ராஜ்.. pic.twitter.com/xNBINEK428
    — RajaTVR (@tvr_raja71815) January 29, 2024

     
    அயோத்தி ராமர் கோயில்:
     
    இதற்கு முன்னதாகவும் ராமர் கோவில் குறித்து பேசிய அவர், “ நீ ராமர் பக்தனாக இரு எனக்கு பிரச்சனை இல்லை. இயேசு பக்தனாக இரு பிரச்சனை இல்லை. அல்லா பக்தனாக இரு. அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், குருட்டு பக்தனாக இருக்காதே. இவர்களால் தான் ஆபத்து” என பேசியுள்ளார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து வருவதால் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராமர் கோவில் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.


    “நீ ராம பக்தானாக இரு, யேசு பக்தானாக இரு, அல்லா பக்தனாக இரு, இவர்களால் பிரச்சனையில்லை. ஆனால் குருட்டு பக்தனாக (அந்தபக்த்) இருக்காதே ! இவர்களால்தான் ஆபத்து.”- @prakashraaj pic.twitter.com/28Kwbm28v6
    — SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) January 18, 2024

     
    பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. அண்மையில் ராமர் கோவிலின் கட்டிடப்பணிகள் முடிந்த நிலையில், கோயில் திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்ட ராமர் கோவில் உலகளவில் பேசப்பட்டது. 20 அடி உயரத்தில் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கொண்டு ராமர் கோயில் அட்டப்பட்டது. 
     
    பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க உலகில் தலைவர்கள் வருகை தந்தனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைத்துறை பிரலங்களும், நாட்டின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். ராமர் கோவில் கட்டப்பட்ட இடத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்து கோவில் கட்டப்பட்டதால் அதை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    மேலும் காண

    Source link

  • Caption Rohit Sharma Records In Visakhapatnam Stadium Ahead Of England 2nd Test | IND Vs ENG 2nd Test: ரோகித் சர்மாவுக்கு மறுவாழ்வு தந்த விசாகப்பட்டினம்
    Caption Rohit Sharma Records In Visakhapatnam Stadium Ahead Of England 2nd Test | IND Vs ENG 2nd Test: ரோகித் சர்மாவுக்கு மறுவாழ்வு தந்த விசாகப்பட்டினம்

    இரண்டாவது டெஸ்ட் போட்டி:
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.
    இச்சூழலில் நாளை (பிப்ரவரி 2) ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளது.  முன்னதாக, இந்த போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளிட்டேர் விளையாடப்போவதில்லை என்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.  பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அதனால் இந்த போட்டியை அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார்/ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.
    வாழ்வு தந்த விசாகப்பட்டிணம்:
    முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா அறிமுகமாகி விளையாடி வந்தார்.  அதேநேரம் 2013 ஆண்டில் தான்  டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த நேரத்தில் இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பது போன்ற கருத்துகள் எழுந்தன.  ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் விளாசினார்.
    இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ரோகித் சர்மா சரிப்பட்டு வர மாட்டார் என்று சொன்னவர்கள் எல்லோருக்கும் இந்த ஆட்டம் பதிலடியாக அமைந்தது. அன்றில் இருந்து இப்போதுவரை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறங்கி வருகிறார். இந்நிலையில் தான் விசாகப்பட்டினம் மைதானத்தில் கேப்டனாக களம் இறங்க உள்ளார் ரோகித் சர்மா. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு மறுவாழ்வு கொடுத்த விசாகப்பட்டினம் மைதானத்தில் கேப்டனாக ரோகித் சர்மா வெல்வார் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.
    மேலும் படிக்க: Viral Video: சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது; சகோதரர் குறித்து பேசிய U-19 நாயகன் முசீர் கான்!
    மேலும் படிக்க: ICC Test Rankings: டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!
     

    Source link

  • சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது 
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் வயது  (38). இவருடைய மனைவி கீர்த்திக்கும்  இரண்டு மகள்கள் உள்ளனர். பாண்டியன் குடி போதைக்கு அடிமையானவர். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை பிரிந்து வெளியே சென்றுள்ளார்.
    பாண்டியன்  இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். அதன் பிறகு மூத்த மகள் (10, ) 2வது மகள் (7) திண்டிவனத்தில் உள்ள விடுதியில் படித்து வருகிறனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் பள்ளியில் விடுமுறை விட்டுள்ளனர். இதனால் பாண்டியன் இரண்டு மகள்களையும்  விடுதியில் இருந்து விடுமுறைக்கு  வீட்டுக்கு அழைத்து வந்தவர். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகும் மகள்களை மீண்டும்  பாண்டியன் விடுதிக்கு கொண்டு சேர்க்கவில்லை.

    தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
    இதற்கிடையில்  தான் பெற்றெடுத்த மகள் என்று கூட நினைக்காமல், பாண்டியன் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  மகள்கள் இந்த சம்பவம் குறித்து என்ன செய்வது அறியாமல் பயத்தில் இருந்து வந்துள்ளனர். உடனடியாக இரண்டு சிறுமிகளும்  செஞ்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாட்டியை கண்டவுடன்  தந்தை தகாத முறையில் நடந்து கொண்டதை கூறி சிறுமி கதறி  அழுது உள்ளார். உடனடியாக  பாட்டி அவருடைய மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சிறுமிகளின் தாய் புகார்  அளித்துள்ளார். உடனடியாக மாவட்ட ஆட்சியர்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

     
    போக்சோ சட்டத்தில் தந்தை கைது  
    இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து கூறியுள்ளனர். காவல்நிலைய ஆய்வாளர்  பிரபாவதி மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து  சேத்துப்பட்டு வந்து பாண்டியனை காவல்நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். பின்னர் 10 வயது சிறுமி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு மருத்துவ  சிகிச்சை அளித்தனர்.
    அப்போது சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதன்  அடிப்படையில், பாண்டியன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய  சிறையில் அடைத்துள்ளனர். தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

    மேலும் காண

    Source link

  • US increases fees for H-1B other categories of non immigrant visas
    US increases fees for H-1B other categories of non immigrant visas


    US Visa: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான பதிவு கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    எச்1பி விசா:
    அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள, இந்தியா உள்ளிட்ட  வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் எச்1பி விசா.
    இதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல. ஒருவேளை எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
    அதேபோல, எல்-1 விசா ஒரு சர்வதே நிறுவனத்தில் நிர்வாக அல்லது நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களால் பயன்படுத்தபடுகிறது. சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டாலும் இதே விசா பொருந்தும். 
    விசாக்களுக்கான கட்டணம் உயர்வா?
    இந்த நிலையில், பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் 780 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாயில் 64,731 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.38,174 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.64,731 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
    மேலும், எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 1,385 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,14,939 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 38,174 ரூபாயாக இருந்த நிலையில், ரூ.1,14,939 ஆக உயர்த்தியுள்ளது அமெரிக்கா.  அதேபோல, EB-5 விசாக்களுக்கான கட்டணம் 11,160 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.9,26,153 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.3,04,983 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.9.26 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
    இந்த கட்டண உயர்வு  ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால், அடுத்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் 157 மில்லியன் டாலர் (ரூ. 1,302 கோடி) செலவாகும். வெளிநாட்டு முதலீட்டளார்கள் அமெரிக்கா வந்து பணிபுரிய EB-5 விசாவை அமெரிக்கா வழங்கி வருகிறது.  விசாக்களுக்கான கட்டண உயர்வால் இந்தியர்கள் உட்பல பலருக்கு அதிர்ச்சிக்கு அளித்துள்ளது.

    மேலும் படிக்க
    கடனில் தள்ளாடுகிறதா இந்தியா? மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
    Mark Zuckerberg: இணையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! பெற்றோரிடம் மனமுருகி மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்!

    மேலும் காண

    Source link

  • ‘புரட்சியின் SYMBOL பா ரஞ்சித்’ | Ashok Selvan Blue Star Success Meet Watch Video
    ‘புரட்சியின் SYMBOL பா ரஞ்சித்’ | Ashok Selvan Blue Star Success Meet Watch Video

    Entertainment
    01 Feb, 07:09 PM (IST)

    Rotterdam film festival – ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா – விடுதலை படத்தை கைதட்டி பாராட்டிய பார்வையாளர்கள்

    Source link

  • CM Stalin: "தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?” இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
    CM Stalin: "தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?” இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி  கேள்வி!


    <p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால&nbsp;<a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.</p>
    <h2><strong>ஏமாற்றத்தையே பரிசளித்துள்ள பட்ஜெட்:</strong></h2>
    <p>இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.</p>
    <p>கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; &nbsp;எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை! மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.</p>
    <p>நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.</p>
    <p>வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை!</p>
    <h2><strong>’இல்லா நிலை’ பட்ஜெட்:</strong></h2>
    <p>உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை! இப்படி ‘இல்லை… இல்லை…’ என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.</p>
    <p>இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.</p>
    <p>மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என &nbsp;அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா? எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.</p>
    <p>நாட்டில் ஜி.எஸ்.டி. &nbsp;வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் &nbsp;மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.</p>
    <p>ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 இலட்சம் கோடி ரூபாயினை ஒன்றிய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. &nbsp;கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவதற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.</p>
    <h2><strong>தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது:</strong></h2>
    <p>இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே… என்ன காரணம்?</p>
    <p>இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?</p>
    <p>காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.</p>
    <p>மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும்&nbsp; இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.</p>
    <p>மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று &nbsp;நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.</p>
    <p>பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
    <h2><strong>தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்:</strong></h2>
    <p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?</p>
    <p>இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ‘ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்’ ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ("four major castes") &nbsp;என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.</p>
    <p>"சமூகநீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் ‘பறிப்பதுதான்’ பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.</p>
    <p>வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; சூலை மாதம் நாங்கள்தான் <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.</p>
    <p>2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.</p>
    <p>தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.&nbsp;</p>

    Source link

  • TN Goverment: கோயில் பூஜை முதல் புனரமைப்பு வரை…பக்தர்களை குஷிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!
    TN Goverment: கோயில் பூஜை முதல் புனரமைப்பு வரை…பக்தர்களை குஷிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!


    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
    ரூ.200 கோடி மானியம்:
    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கலைச் செல்வங்களாக–பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் திருக்கோவில்களின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் திருக்கோவில் விழாக்களைத் தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
     
    இதன் காரணமாக, முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே திங்கள் முதல் இதுவரை 1,339 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
     
    இந்த 200 கோடி ரூபாயுடன் நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.104.84 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ.304.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது 197 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறத் திருக்கோயில்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி 
    ரூ.1 இலட்சம் என்பது ரூ.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
    17,000 திருக்கோயில்களில்  ஒருகால பூஜை திட்டம்:
    இத்திட்டத்தில் உதவிபெறும் கோயில்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 என்பது 1250 என உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 2,500 திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி கூடுதலாக அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில்  ஒருகால பூஜை கூட செய்ய நிதிவசதியில்லாத 12,959 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ரூபாய் ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 
     
    இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 திருக்கோயில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும் அரசு ரூ.200 கோடி மானியமாக வழங்கியுள்ளது. 
     
    இப்படி, திருக்கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற்று இந்து சமய அறநிலையத் துறை புதிய பரிமாணம் அடைந்து வருவதைக் கண்டு  பொதுமக்களும் பக்தர்களும் தமிழ்நாடு முதலமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    மேலும் படிக்க

     

    மேலும் காண

    Source link

  • சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!
    சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!


    <p>மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>உளவு பார்க்க வந்த புறா?</strong></h2>
    <p>இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.</p>
    <p>இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம் தேதி மும்பையில் உள்ள செம்பூர் அருகே புறா ஒன்று பிடிபட்டது. அந்த புறாவின் கால்களில் இரண்டு செம்பு வளையமும், ஒரு அலுமினிய வளையமும் இருந்தது. மேலும், அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த பேப்பரில் சீன மொழியில் ஏதோ வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதையறிந்த காவல்துறையினர் இந்த புறா சீனாவிற்காக உளவு பார்க்க வந்த பறவையோ? என்று சந்தேகித்தனர்.</p>
    <h2><strong>எங்கிருந்து வந்தது?</strong></h2>
    <p>இதையடுத்து, அதன் கால்களில் இருந்து கைப்பற்றப்பட்ட செம்பு வளையங்கள் மற்றும் அலுமினிய வளையங்களை பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த புறாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த புறா எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த புறா தைவானில் நடைபெற்ற பந்தயத்தில் பங்கேற்ற புறா என்றும், அப்போது இந்த புறா பந்தயத்தில் பங்கேற்றபோது வழி தவறி இந்தியாவிற்குள் வந்தது என்றும் கண்டறியப்பட்டது.</p>
    <p>இந்த புறாவை போலீசார் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கினால் மட்டுமே விடுக்க முடியும் என்ற சூழல் இருந்தது. இதனால், கடந்த மே மாதம் முதல் அந்த புறா கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த புறா உளவு பார்க்க வந்த புறா இல்லை என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, புறாவை விடுக்க போலீசார் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கினர். மேலும், புறாவின் உடல்நலம் நல்ல நிலையில் இருந்ததாலும், இந்த புறா கூண்டில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது.</p>
    <p>உளவு பார்க்க வந்த புறா என்று கருதி வழி தவறி வந்த பந்தய புறாவை 8 மாதங்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>மேலும் படிக்க: <a title="Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு" href="https://tamil.abplive.com/news/india/hindus-pray-in-gyanvapi-mosque-cellar-30-years-after-mulayam-yadav-sealed-it-following-babri-masjid-demolition-165020" target="_blank" rel="dofollow noopener">Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="Tamil Nadu Assembly : &rsquo;பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்?&rsquo; தமிழக அரசு தயாரிக்கும் உரையை வாசிக்கும் ஆளுநர்..!" href="https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-legislative-assembly-likely-to-start-on-february-12-tamil-nadu-budget-tabled-on-february-19-165000" target="_blank" rel="dofollow noopener">Tamil Nadu Assembly : &rsquo;பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்?&rsquo; தமிழக அரசு தயாரிக்கும் உரையை வாசிக்கும் ஆளுநர்..!</a></p>

    Source link

  • Blue Star SuccessMeet : "ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan
    Blue Star SuccessMeet : "ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan


    <p>"ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan | Blue Star SuccessMeet</p>

    Source link

  • பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
    பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!


     
    தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்:
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதனிடையே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
     
    இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியுள்ளார். அந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். மேலும், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி 2024-2015 ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கையினையும், வருகிற 21 ஆம் தேதி 2023-2024 ஆம் ஆண்டிற்கான முன்பண செலவு மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்” என்று கூறினார்.
    முழு உரிமை உண்டு:
    பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்ற முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்குத்தான் உண்டு என்பதை நானும் சொல்கிறேன் இதுக்கு முன்னதாக இருந்த சபாநாயகர் தனபாலும் கூறியிருக்கிறார். அதைநான் பலமுறை கூறியிருக்கிறேன். திரும்பவும் நினைவுபடுத்துகிறேன்” என்றார். 
    சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலை செய்யப்படுமா என்ற கேள்விக்கு, “மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, சட்டமன்றத்தில் நேரலையாக காண்பிக்க முடியாது என்று எழுதிக்கொடுத்தார்கள். அந்த வழக்கில் தான் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் தன்னை இணைத்துக் கொண்டு முழுமையாக நேரலை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
    திமுக அரசின் எண்ணம்:
    ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரை முழுமையாக நேரலையில் காண்பிக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் எண்ணம். தற்போது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கேள்வி பதில்கள் முழுமையாக காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய கவனஈர்ப்புத் தீர்மானங்கள் , அரசின் முக்கிய தீர்மானங்கள் எல்லாம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மீதியிருக்கின்ற மானியக்கோரிக்கைகளையும் முழுமையாக காண்பிக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கான பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
     
     
     
     
     
     

    மேலும் காண

    Source link

  • Mark Zuckerberg: இணையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! பெற்றோரிடம் மனமுருகி மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்!
    Mark Zuckerberg: இணையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! பெற்றோரிடம் மனமுருகி மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்!


    <p>தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலானோர் இந்த சமூக வலைதளங்களில் பலநேரம் செலவழிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைள் இதற்கு அடியாகி விடுகின்றனர். இதனால், பாலியல் துன்புறுத்தல், மோசடி போன்ற பல பிரச்னைகள் தலைதூக்கி நிற்கின்றன.&nbsp;</p>
    <h2><strong>சமூக வலைதளங்களால் பாதிக்கப்படும் சிறார்கள்:</strong></h2>
    <p>கடந்த ஆண்டில் &nbsp;குழந்தைகளுக்கு எதிராக பாலியன் துன்புறுத்தல் அதிகரிக்கவே மெட்டா உள்ளிட்ட முன்னணி வலைதள நிறுவனங்கள் மீது பல்வேறு மாகாணங்கள் வழக்குகள் பதிவானது.&nbsp; இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், மெட்டா, டிக்டாக், எக்ஸ், ஸ்னாப் உள்ளிட்ட பல்வேறு வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
    <p>பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு செனட் சபையில் இருந்தனர். செனட் சபையில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சமூக வலைதளங்களால் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக&nbsp; கண்ணீர் வடித்திருக்கின்றனர்.</p>
    <p>பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தைகள் &nbsp;தொடர்பான காட்சிகள் அங்கு ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர். தொடர்ந்து, வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வன்கொடுமையாளர்கள் குழந்தைகளுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிர்வாக அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. &nbsp; மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, நிம்மதியை இழந்து, சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொள்வது என அடுக்கடுக்கான புகார்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.&nbsp;</p>
    <h2><strong>மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்:</strong></h2>
    <p>இதனை தொடர்ந்து, அமெரிக்க செனட் நீதித்துறை குழு உறுப்பினர் ஜோஷ் ஹாவ்லி, மார்க் ஜுக்கர்பெர்க்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என்று கேட்டார்.&nbsp; இதனை அடுத்து, திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய அந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.&nbsp;&nbsp;</p>
    <p>அவர்களிடம் மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வரக் கூடாது. என்னை மன்னியுங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மெட்டா உறுதி பூண்டுள்ளது&rdquo; என்றார்.&nbsp;</p>
    <p>மேலும், இந்த கூட்டத்தில் குந்தைகளின் பாதுகாப்பை &nbsp;உறுதி செய்வதாக நிறுவனங்கள் தெரிவித்ததை தொடர்ந்து, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது.&nbsp; ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. நீரை திறந்து விடுங்கள்
    தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. நீரை திறந்து விடுங்கள்


    தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வதில் பல காலமாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. காவிரி நதிநீரை நம்பி இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.
    தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர்:
    இரு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலின்றி நதிநீரை பங்கீட்டுக் கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதில் இரு மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு எந்தளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடும்.
    இந்த நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு பிறகு நடந்த இந்த கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் மட்டுமின்றி கேரளா, பாண்டிச்சேரி மாநில பிரதிநிதிகளாக அந்தந்த மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நடப்பு பிப்ரவரி மாதத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்:
    இந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான பரிந்துரைகளை காவிரி நீர் ஒழுங்காற்று குழு வழங்கி வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிப்ரவரி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள நீர்மட்டத்தின் அளவு முக்கிய பங்குவகிக்கிறது. கர்நாடக காவிரி மீன்பிடி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், அங்கு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அந்த காலகட்டங்களில் தமிழ்நாடு எதிர்பார்க்கும் அளவிற்கு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடும். மற்ற காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் போதியளவில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிடுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
    மேலும் படிக்க: Tamil Nadu Budget: பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
    மேலும் படிக்க: நிம்மதி.. 6 மாதங்களில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்; தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி

    மேலும் காண

    Source link

  • Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions
    Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions


    உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
    “வளர்ச்சியை பற்றி பேசும் பட்ஜெட்”
    ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார். இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புக்கும் குறைவாக விவசாயத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.21 லட்சம் கோடியாக பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது.
    பட்ஜெட்டை தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட். எங்களை பொறுத்தவரையில், ஜிடிபி என்றால் நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செயல்திறனை. நிர்வாத்தை பொறுத்தவரையில், இந்த பட்ஜெட் நமது வளர்ச்சியை பற்றி பேசுகிறது. 
    சரியான நோக்கங்கள், சரியான கொள்கைகள் மற்றும் சரியான முடிவுகளுடன் நாங்கள் பொருளாதாரத்தை நிர்வகித்தோம். எனவே இது அக்கறையுடன் கூடிய நிர்வாகம். ஜிடிபியில் D என்பது மக்கள் வாழ்வதை குறிக்கிறது. நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்கள். எதிர்காலத்திற்கான உயர்ந்த அபிலாஷைகளைக் கொண்டுள்ளார்கள்.
    நிதிப்பற்றாக்குறை எவ்வளவு?
    ஜிடிபியில் உள்ள ‘P’ அரசின் செயல்திறனை குறிக்கிறது. ஜி20 நாடுகளிலேயே தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 7% வளர்ச்சியை பெற்ற நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியில் பங்கேற்றுள்ளன. 2004 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 
    முன்மாதிரியான நிர்வாகம், வளர்ச்சி, செயல்திறன், வெற்றிகரமான விநியோகம், பொது நலன் ஆகியவை மூலம் மக்களின் நம்பிக்கை, ஆசீர்வாதம் அரசுக்கு கிடைத்துள்ளது. நல்ல நோக்கத்துடன் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வரவிருக்கும் ஆண்டுகளில் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மேற்கொள்ளப்படும்” என்றார்.
    நிதி பற்றாக்குறை குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 5.8%ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு பதிவான 5.9ஐ விட மிகக் குறைவு. அதேபோல், 2024-25 பட்ஜெட்டில், 5.1ஐ நிதிப் பற்றாக்குறையாக குறிப்பிட்டுள்ளோம். 
    2021-22 இல், நிதி பற்றாக்குறையை குறைக்க திட்டமிட்டோம். அந்த பாதையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. 2025-26 நிதியாண்டுக்குள் 4.5 சதவிகிதமாகவோ அல்லது அதற்குக் கீழே நிதிப் பற்றாக்குறையை குறைப்போம்” என்றார்.
     

    மேலும் காண

    Source link