உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை கூறிய பிரேமலதா விஜயகாந்த்… ஏன் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் உள்ளதால் ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை, வியாசர்பாடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக தனக்கு தெரியவில்லை என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்குதான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்றும்…

Read More

மீண்டும் பைக்கில் ஏறிய டிடிஎஃப் வாசன்… ஆனால் செய்த‌து என்ன தெரியுமா?

பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்ய இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் யுடூபர் டிடிஎப் வாசன் பயணம் செய்தார். பிரபல யூட்டுபரும் மோட்டார் சைக்கிள் சாகச வீரருமான டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்படுத்தியதின் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையம் டிடிஎஃப்…

Read More

கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக…

Read More

உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின்…

Read More

நடிகர் போண்டா மணியின் இறுதி ஊர்வலத்தில் இவங்க மட்டுமே சென்றனர்… சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி…

மறைந்த நடிகர் போண்டா மணியின் இறுதி ஊர்வலத்தில் மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஒருசிலரே பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பல்வேறு படங்களில் நடித்து மக்களிடம் பாராட்டை பெற்றவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. உடல்நலக்குறைவு காரணமாக பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழ் சினிமாவில் இலங்கை தமிழ் பேசி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜூவின் பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்….

Read More

வரலாறு காணாத அளவில் முட்டை விலை கடும் உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…

நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில், புதிய உச்சமாக முட்டை கொள்முதல் விலையானது ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ந் தேதி வரை 4 ரூபாய் 75 காசுகளுக்கு, கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாள்தோறும் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில், 5 காசுகள், 10 காசுகள் என படிப்படியாக கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வந்த‌து. இதன்காரணமாக வரலாறு காணாத வகையில், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் புதிய…

Read More

தூத்துக்குடியில் சுங்க‌க் கட்டணத்திற்கு திடீர் விலக்கு… ஆனால் யாருக்கு இந்த விலக்கு? முழு விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்க‌ச் சாவடிகளில் 31ஆம் தேதி வரை, நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. இதனால், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 24 ஆம் தேதி முதல்…

Read More

போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி… விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

சென்னையில் போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி செய்த கும்பலை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் பிடித்துள்ளனர். புது பெருங்களத்தூரில் ஷூ மற்றும் பேக் கடையை நடத்தி வருபவர் முகமது அசைன். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த சிராஜுதீன்(33) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாதம் ஒரு முறை ரயில் மூலமாக வந்து பீச் ஸ்டேஷனில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வியாபார பணத்தை வசூல் செய்துவிட்டு எடுத்து செல்வது வழக்கம். அதே போல சிராஜுதீன்…

Read More

அண்ணாமலை நிதியை வாங்கி கொடுத்தால் நிவாரணம் உயர்த்தி வழங்குகிறோம்… அமைச்சர் மா.சு. பேச்சு…

மத்திய அரசிடம் ரூ.7,000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அந்த நிதியை அண்ணாமலையை வாங்கி கொடுத்தால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 1,400 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உறுப்பினர்கள் நிவாரண நிதி வழங்குகிறார்கள் எனக் கூறுவது வதந்தி என்றார். அப்படி இருந்தால் முன்னாள் ஜெயக்குமார் அதனை நிரூபிக்கட்டும்…

Read More

மாடர்ன் தியேட்டர்ஸ்.. அதை அப்படி பார்க்க‌க்கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்…

மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரத்தில் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் அரசின் சார்பில் ஏதோ செய்யப் போகிறோம் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுகிறது என்றும், ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்றும் கூறினார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை விரிவாக்கம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், சாலை மேம்பாட்டுத்…

Read More

பா.ஜ.கவுக்கு மூடிய கதவை காங்கிரசுக்கு திறந்த அதிமுக… ஜெயக்குமார் வெளியிட்ட முக்கிய தகவல்…

பா.ஜ.க உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஹேப்பி கிட்ஸ் அகாடமி ஏற்பாட்டில் கலாம் உலக சாதனை நிறுவனத்தினர் முன்பு, பள்ளி மாணவ மாணவிகளின் கண்களை கட்டிகொண்டு படம் வரைதல், cube- ஐ பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவத்தை கொண்டு வருதல், யோகாசனம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Read More

குமரியில் கனமழை வெள்ளம்… அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்எல்ஏ…

குமரியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து உதவிகளை வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகளில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நாகர்கோயிலில் ஊட்டுவாழ் மடம், பாறை கால் மடம்ர மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு, பாதுகாப்பான…

Read More

பிராமணர்கள் குறித்து தவறான செய்தி வெளியிட்டால்…! அரசுக்கு விடுத்த கோரிக்கை

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிராமணர் சமுதாயம், சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்…

Read More

வேலை நிறுத்தம்… போக்குவரத்து ஊழியர்கள் விடுத்த புதிய அறிவிப்பு… அரசுக்கு புதிய சிக்கல்…

தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் பொங்கலுக்கு முன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அண்ணா திமுக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாமக,நாம் தமிழர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த…

Read More

அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவிகளை பலியாக்க திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? – சீமான் கேள்வி

சென்னையில் எண்ணெய் கழிவுகள் விவகாரத்தில் அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி…

Read More

நிவாரண முகாம்களில் ரூ.14.40 கோடிக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி…

சென்னை மாநகராட்சியில் வெள்ள நிவாரண முகாம்களில், ரூ.14.40 கோடி செலவில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்பட்டது. சென்னையில் 193 இடங்களில் முதல் மாடி அளவிற்கு மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில் மழை நீர் வடிய ஐந்து நாட்கள் ஆனது. மழைநீர் தேங்கிய பகுதிகளை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின் பழுது சரி செய்து, குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, அதற்காக…

Read More

நடிகர் மன்சூர் அலி கான் பேச்சை சீரியசாக எடுத்த உயர்நீதிமன்றம்… திரிஷா தான் அதை செய்திருக்க வேண்டுமாம்…

மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read More