"பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?"- கிருத்தி சனோன் | Kriti Sanon slams trolls for Raksha Bandhan ad backlash


ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும் ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கிருத்தி சனோன்

கிருத்தி சனோன்

அந்தப் பதிவில், “பண்டிகைகளின் உண்மையான சாரம்சம் நாம் அணியும் ஆடையில் இல்லை, நமது உணர்வுகளில்தான் உள்ளது. பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?

ஒரு பெண்ணின் கலாச்சார மரியாதையை அவருடைய ஆடையின் நெக்லைனை (neckline) வைத்து மதிப்பிட முடியாது. மாறாக கலாச்சாரமும் பாரம்பரியமும் இதயத்தில்தான் இருக்க வேண்டும்” என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed