நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை|‘No Navodaya Schools’: Udhayanidhi’s Strong Message to TN Govt


தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!

நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில்.. “தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது” என்று மாண்பமை உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனிநாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது.

நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.

அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports