டெல்லி ஏஐ மாநாட்டில் உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு: சீன ரோபோக்கள் என தொடரும் சர்ச்சை  - Kumudam

5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.

பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர். லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.

இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமான ஒன்று.

மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யை ஆதரிப்பது இன்னும் வெட்கக்கேடானது.மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இதை குறிப்பிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதவில், இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed