மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” தவெக தலைமையில் உள்ள கூட்டணி அமைச்சர், கூட்டணித் தலைவர்கள் வெவ்வேறு பாதைகள் இருந்தாலும் ஒரே கொள்கை என்று சொல்கிறார். இதே பாணியில் தான் திமுக கூட்டணியில் விசிக, ஐ.யூ.எம்.எல், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருந்தது. அப்போதும் ஒத்த கொள்கையினுடைய கூட்டணி என்று சொன்னார்கள். அந்த கூட்டணி இப்போது சிதறி போய்விட்டது.

ஆனால் அதிமுக கூட்டணி அப்படி அல்ல, கூட்டணி வேறு கொள்கை வேறு… கொள்கை நிரந்தரமானது, கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும். 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையில் இருக்கிற கூட்டணியைப் பற்றி கல்லாப்பெட்டி கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தார்.
இப்போது அந்த கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக தலைவர் முதலமைச்சர் ஆவதற்கு அந்தர் பல்டி அடித்து அவர் தலைமையில் சென்றிருக்கிறார்களே. அந்த கூட்டணியை என்னவென்று சொல்வது? இவர்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வார்களா?

























If I had to summarise the editorial sensibility of this site in a few words it would be careful and…