விஜய்


பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கும் முன்பு, அதே திட்டத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவசர அவசரமாக தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்பட்டது. அதன் இன்றைய நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

தலைமைச் செயலகம் என்பது மாநிலத்தின் அடையாளம். எனவே, புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அதை மாற்றுவதற்கான தேவை எழாத வகையில், பொருத்தமான இடத்தில், தேவையான நிலத்தில் அமைக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய இடத்தை தேட வேண்டியிருக்கும். பட்டினப்பாக்கத்திற்கு வரும் சாந்தோம் நெடுஞ்சாலை மிக குறுகலானது. அதை அகலப்படுத்துவதும் சாத்தியம் இல்லாதது. கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரை வழியாக பட்டினப்பாக்கம் வரும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், அங்குள்ள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும். அப்படிச் செய்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும்.

விஜய்

எனவே, சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில், தலைமைச் செயலகம், சட்டமன்றம், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான வீடுகள், அரசு அலுவலர்கள் குடியிருப்புகள், பூங்காக்கள், மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மெட்ரோ ரயில், அகலமான பல அடுக்கு சாலைகள் போன்ற நவீன வசதிகளுடன், புதிய நகரத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நிரந்த தீர்வாக இருக்கும். இதற்கான இடத்தை அடையாளம் கண்டு, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, புதிய தலைமைச் செயலகம், சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்து நின்று தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமையைப் பேசும்.

மாறாக, நான் வைத்ததுதான் சட்டம், என் வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகத்தை கட்டுவேன் என பிடிவாதமாக செயல்பட்டால், அது ஆபத்தில் முடியும். இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் எனக்கூறி அடுத்த 10 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்திற்கு இடம் தேட வேண்டியிருக்கும். இதையெல்லாம் உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன்  முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Деталей вистачає не лише на планове обслуговування, а й на серйозний ремонт двигуна. Колодки відходили цілий сезон активної їзди, і…

  2. Особисто брав свічки й захист, усе знайшлося в одному місці. Колодки відходили цілий сезон активної їзди, і гальма досі тримають…

  3. Мене приємно здивувало, що запчастини є як на дорожники, так і на кросові мотоцикли. Оригінал не завжди по кишені, тому…

  4. Спершу варто переглянути весь розділ, бо потрібна деталь часто ховається серед схожих. Оригінал не завжди по кишені, тому брав перевірений…

  5. Особисто брав свічки й захист, усе знайшлося в одному місці. Ланцюг і зірки ставив від відомої марки, пробіг уже пристойний,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed