2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் “ரிகர்வ்’ பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார்.
‘ஷூட்-ஆஃப்’ மூலம் தீர்மானிக்கப்பட்ட மிகவும் பரபரப்பான தங்கப் பதக்கப் போட்டியில், 25 வயது நிரம்பிய தீரஜ் பொம்மதேவரா, ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆண்கள் தனிநபர் மற்றும் பெண்கள் தனிநபர் ஆகியோருக்கான இப்போட்டியில் ‘ரிகர்வ்’ மற்றும் ‘காம்பவுண்ட்’ பிரிவுகளில் தலா எட்டு வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சீசனின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக தீரஜ் பொம்மதேவரா பங்கேற்றார்.
நடைபெற்ற ஐந்து சுற்றுகளில் தீரஜ் மற்றும் நகானிஷி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றில் இருவரும் 28-28 எனச் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது சுற்றில் ஜப்பானிய வீரர் 29-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
பின் தீரஜ் மூன்றாவது சுற்றை 29-28 என்ற கணக்கில் வென்றார். ஆனால், நான்காவது சுற்றில் மீண்டும் நகானிஷி 30-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.
























