தெற்கு வளர்கிறது, வடக்கு வளரவும் தெற்கு உதவுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ தமிழும், தமிழ்நாடு நம்மை இயக்கி கொண்டு இருப்பதால்தான் உற்சாகமாக இயங்குகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற உன்னத தலைவர்கள் போட்டு தந்த வழிதடம்தான் காரணம். திராவிட மாடல் வளர்ச்சியில் நாம் பயணித்துகொண்டு இருப்பதால்தான் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.
ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது. இத்தகைய தகுதியும், பெருமையும் எதனால் என்றால் திராவிட இயக்கதால்தான்.
ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல, கொள்கையை செயல்படும் களம் என்பதை நிரூபித்து காட்டியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும்.” என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும் காண

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…