முதல்வர் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kumudam

சென்னை எழிலகத்தில் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். விண்ணப்பம் 5 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித் தொகை, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை எப்படி எளிதாக கிடைக்கும் வகையில் நிறைவேற்றுவது என ஆய்வு செய்ய உள்ளோம். ஆன்லைன் முறையில் பதிவு செய்யும்போது, சில நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதாகக் குறைகள் உள்ளது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவுடன், அந்தந்த வருவாய் வட்டத்தில் விஏஓக்கள் ஆய்வு செய்து அந்தப் பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு நிலங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்யவுள்ளோம். பட்டா மாறுதலில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை பணிக்கு ரூ.1000 கோடி தேவை என சொன்னோம், அதனை முன்னெச்சரிக்கையாகவே மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

முதல்வர் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு குறைவாகவே நீர் வருகிறது. மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெரிதாக இல்லை.பேரிடர் மேலாண்மை நிதி ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.  தேவையான நிதியை மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டுப்பெறுகிறோம்.

வருகிற 11-ந்தேதி டெல்லிக்கு முதலமைச்சர் விஜய் செல்லும்போது அரசுக்கு தேவையான நிதி குறித்து பேச உள்ளார்.  முதலமைச்சர் செயல்பாடுகளை மட்டுமே முக்கியமாக கருதுகிறார். என்றார்.

Source link


  1. dostavka cvetov 735 Avatar

    доставка цветов на завтра Омск https://omsk-dostavka-cvetov.ru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вы планируете строительство жилья, обратите внимание на [url=https://karkasnye-doma-pod-klyuch13.ru]каркасный дом спб[/url] — это современное и экономичное решение для комфортного проживания.…

  2. Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг системных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. Выбор надежного интегратора…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed