CM Vijay - London Meeting


முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால், முதல்வரின் இந்த லண்டன் பயணத்தில் எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், பல விஷயங்கள் மர்மமாகவே இருப்பது விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது.

CM Vijay – London Meeting

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய சில தொழில் முதலீட்டாளர்கள், “ஆகஸ்ட் 13 ஆம் தேதி ‘வெற்றித் தமிழ்நாடு’ என்ற பெயரில் 68000 கோடி அளவுக்கான முதலீடை ஈர்த்ததாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழக அரசு அறிவித்தது. ஆட்சியமைத்த 100 நாளில் 1லட்சம் கோடி முதலீடை ஈர்த்திருப்பதாகவும் கூறினார். ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அதற்குள்ளாக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு பெரிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில், அதுசம்பந்தமாக முன் தயாரிப்புகளை செய்திருக்க வேண்டும். தொழில்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முதலீடு செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அப்படி பன்னாட்டு தொழில் முதலீட்டாளர்களின் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை.

CM Vijay - London Meeting
CM Vijay – London Meeting

முதல்வர் முதல் முறையாக வெளிநாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க செல்கிறார், அந்தப் பயணத்தில் தொழில்துறை அமைச்சரும் அதிகாரிகளும் இல்லவே இல்லை. தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்து செல்லவில்லை என்பதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு கொடுக்கவில்லை. தொழில்துறையையும் முதல்வர் தன்னுடைய கையில் வைத்துக் கொள்ள நினைத்தால், முறையாக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவையை மாற்றி தொழில்துறையை கையில் எடுக்க வேண்டும். முதல்வரின் கையில் பத்தோடு பதினொன்றாக தொழில்துறை இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிதான் பாதிக்கப்படும்.

லண்டன் போய் தமிழக அரசு ஈர்த்திருக்கும் முதலீடுகளிலும் குழப்பம் இருக்கிறது. ஒரு நிறுவனம் 3000 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசு கூறியிருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் எந்த நிறுவனம் அவர்கள் சார்பில் முதல்வரை சந்தித்தது யார் என எந்தத் தகவலும் இல்லை. இப்படி மொட்டைக் கடிதாசி போல முதலீடுகள் குறித்த தகவலை வெளியிட்டால் அது நம்முடைய மாநிலம் குறித்த நம்பகத்தன்மையையே கெடுத்துவிடும்’ என்கின்றனர்.

‘முதல்வர் விஜய் செப்டம்பர் 15 ஆம் தேதி காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைப்பதாக இருந்தார். அதேமாதிரி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தையும் தொடங்கி வைக்கவிருந்தார். இதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயங்கள். மலேசிய பிரதமர் கூட முதல்வரை சந்திக்க நினைத்தார்.

Ajith Kumar - CM Vijay
Ajith Kumar – CM Vijay

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு அவசர அவசரமாக லண்டன் சென்றதன் பின்னணி என்னவென்றே தெரியவில்லை. முதல்வரின் பயணத்தில் எந்தவித வெளிப்படத்தன்மையுமே இல்லை. செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 10:05 மணிக்கு முதல்வர் சென்னையில் விமானம் ஏறினார். அதற்கு சரியாக ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக 8:25 மணிக்குதான் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் லண்டன் செல்கிறார் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல்வர் கிளம்பும் போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. லண்டனிலிருந்து ரிட்டன் வந்த பிறகும் முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. முதல்வர் லண்டனில் 6 நாட்கள் முகாமிட்டிருந்தார்.

ஒரு நாள் கார் ரேஸை தொடங்கி வைத்து அஜித்துடன் நட்புப் பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சில முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மீதமிருந்த நான்கு நாட்களும் முதல்வர் லண்டனின் என்ன செய்தார்? அதைப் பற்றி யாருக்குமே தெரியாது. முதல்வர் தனிப்பட்ட விவகாரத்திற்காக லண்டனுக்கு சென்றிருந்தால், அதற்கான முழு உரிமையும் அவருக்கு இருக்கிறது. ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என லண்டன் சென்றுவிட்டு அங்கே முதல்வர் தங்கியிருந்த 6 நாட்களில் அவரின் நிகழ்ச்சி நிரல் என்னவென்று கூட மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சொல்லப்படாது என்றால் இங்கே வெளிப்படைத்தன்மை எங்கே? புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் சில நிறுவனங்களின் தலைமையிடம் இந்தியாவிலேயே இருக்கிறது.

CM Vijay
CM Vijay

அவர்களுடன் முதலீடை ஈர்க்க எதற்காக லண்டன் செல்ல வேண்டும்? தொழில்துறையில் வளர்ச்சியை எட்ட நம்முடைய மாநிலத்துக்கு வெளியே தமிழ்நாட்டை பற்றிய நல்ல எண்ணமும் நம்பிக்கையும் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட வேண்டும். எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் தொழில்துறை அமைச்சரையே அழைத்து செல்லாமல் முதலீடுகளை ஈர்த்துவிட்டேன் என ஒரு முதல்வர் பேசுவது நம்முடைய மாநிலத்தின் மீதான நல்ல எண்ணத்தைதான் குலைக்கும். இது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

‘பவர் செண்டர்கள் இல்லாமல் வெளிப்படைத்தன்மையோடு நிர்வாகத்தை நடத்துவேன்’ என பதவி ஏற்கையில் முதல்வர் விஜய் பேசினார். பேசியதோடு அந்த வசனங்களை அப்படியே மறந்துவிட்டாரோ?



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Подключить ведение направления аутсорсинг охраны труда на предприятии для организации. Квалифицированные сотрудники контролируют комплекс обязательных мероприятий. В перечень работ осуществляется…

  2. Легко сейчас https://radio-dacha-slushat.ru без регистрации. На радиостанции можно услышать знакомые мелодии. Начинайте прослушивание в дороге. Наслаждайтесь эфиром с планшета быстро…

  3. Заказать обслуживание аутсорсинг охрана труда москва с учетом специфики деятельности. Эксперты по охране труда берут на себя текущее сопровождение. При…

  4. Рассмотреть услуги аутсорсинг охраны труда в москве под ключ. Квалифицированные сотрудники контролируют работу по охране труда. В состав услуги включается…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports