பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?


ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 
களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாடு பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓபிஎஸ் அணி, எத்தனை தொகுதியில் போட்டியிட உள்ளது, எந்த தொகுதியில் போட்டியிட உள்ளது என கேள்விக்குறியாக இருந்தது. மேலும் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே கூட்டணி உடன்பாடு குறித்து பெரும் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மேலும் அந்த ஒரு தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், நானே களத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளேன் என்று யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பலத்தை நீருபிப்பாரா?:
அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை பெறுவதே இலக்கு என செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிக்கப்பட்டுவிட்டார். அதிமுக கட்சி- சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது. 
அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், கட்சி- சின்னம் கோரி வழக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தாலும், அவருக்கு பின்னடைவையே சந்தித்து வருகிறார். 
மேலும், ஓபிஎஸ் பாஜக கூட்டணிக்குச் சென்றார், ஆனால் பாஜக கூட்டங்களில் ஓபிஎஸ் அழைக்கப்படாமை, கூட்டணி அறிவிப்பு மேடைகளில் கூட ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என பேசுபொருளானது. 

Source link