தீப்பிடித்த ரயில் பெட்டி.. தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பல

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில்  மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே..

1 minute

Read Time


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில்  மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட  ஜாரியா ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு படையினரும், ஆம்புலன்ஸ்களும் வந்துள்ளன. இரவு நேரம் என்பதால் ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பதில் சற்று சிக்கல் நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 
மேலும் வெளியான முதல்கட்ட தகவலின்படி, பயணிகள் ரயில் ஒன்றில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் பயணித்த பொதுமக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெளியே குதித்துள்ளனர். அப்போது அருகிலுள்ள தண்டவாளத்தில் எதிர்புறத்தில் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. . இந்த விபத்து சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Nearly 12 people have lost their lives in a #TrainAccident near Kalijhariya Halt under the Asansol railway division in #Jamtara district. #Jharkhand 🥺 pic.twitter.com/rItIoMTS7x
— Sumit (@YourBuddy1129) February 28, 2024

ஆனால் ரயிலில் தீப்பிடித்த செய்தியை கிழக்கு ரயில்வே அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஒரு ரயிலில் இருந்து இறங்கி சிலர் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அதில் ரயிலில் அடிபட்டு  இறந்த இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்துள்ளதால் இன்னும் எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மேலும் காண

Source link

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports