ABP Cvoter Opinion Poll: அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், நமது ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மக்களவை தேர்தல்:
அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் INDIA கூட்டணி கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருக்கும் INDIA கூட்டணி மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான INDIA கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி என மும்முனை போட்டி நிலவிகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
இவற்றை தவிர, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வரவிருக்கும் தேர்தலில் INDIA கூட்டணி 50 சதவிகித வாக்குகள் மேல் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக 27 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 11 சதவிகித வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் காண