தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்

அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், இந்த இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கிடையேதான் போட்டி இருக்கும்.

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் அமெரிக்க அதிபர் தேர்தல்:

இந்த சூழிலில், அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, வரும் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார்.

பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து இருவரும் டிரம்ப்-க்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்-க்கு சவாலாக மாறியுள்ள நிக்கி ஹேலி:

அயோவா மாகாணத்தை தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலிலும் டிரம்பே வெற்றிபெற்றுள்ளார். குடியரசு கட்சியினர் மத்தியில் இருக்கும் ஆதரவை பொறுத்தவரையில், டிரம்ப் முதல் இடத்திலும் நிக்கி ஹேலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதை தொடர்ந்து, நிக்கி ஹேலியின் சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

சொந்த மாகாணம் என்பதால் தனது ஆதரவை பெருக்கி கொள்ள நிக்கி ஹேலி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அயோவா, நியூ ஹாம்ப்ஷயரை போன்று தெற்கு கரோலினாவிலும் ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டால், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

அதிபராக இருக்கும் போது அவரை பதவி நீக்கம் செய்ய இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இரண்டு முறையும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் அதிபர் பதவியை தக்க வைத்து கொண்டார் டிரம்ப். சர்ச்சைகளுக்கு பெயர் போன டிரம்ப், சட்ட ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், மூன்று மாகாண உட்கட்சி தேர்தலில் அவர் வெற்றிபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: வேலையை காட்டும் சீனா! பரபரப்பை கிளப்பும் ஆய்வு கப்பல் – இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Source link