ட்ரோன் மூலம் தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் அனுப்பும் முதற்கட்ட சோதனை நடைபெற்றது.

ட்ரோன்கள்

ஆள் இல்லாமல் இயங்கக்கூடிய சிறிய வகை விமானத்தின் பெயர் ட்ரோன் என அழைக்கப்படுகிறது. இது விமான வடிவிலும் பல்வேறு வடிவங்களிலும் உள்ளது. ஆளில்லா விமானங்களில் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆளில்லா விமானங்களில் தொழில்நுட்பமும் தினமும் மெருகேறி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களில் பயன்பாடுகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மருத்துவத்துறை ட்ரோன் பயன்பாடு

மருத்துவத்துறையை பொறுத்தவரை ட்ரோன்களின் பயன்பாடு முக்கிய தேவையாக கருதப்படுகிறது. எளிதில் சென்று சேர முடியாத பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்துகளை அனுப்பி வைக்க முடியும், அதேபோன்று யுத்த காலங்களிலும் ஆளில்லா விமான மூலம் மருந்து அனுப்பி வைப்பது அவசியத் தேவையாக பார்க்கப்படுகிறது. இதுபோக இந்தியா முழுவதும் ட்ரோன் மூலம் மலைப்பகுதிகள், வனாந்திர காடுகள் பகுதிகளில் முக்கிய தேவைகளாக மாறிவருகிறது.

மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம்

இதன் இன்னொரு முக்கிய அங்கமாக மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டது. செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள இதர தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் விரைவாக அனுப்பவும் ரத்தப் பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்து பரிசோதை செய்ய சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் எடுத்து செல்லும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. பரனூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பவும்,இரத்த மாரிதிகளை எடுத்து வரவும் திட்டமிட பட்டுள்ளது.

சிறிய ரக ட்ரோன் பரிசோதை

குறிப்பாக மூன்று பிரிவுகளாக எல்லைகளை வரையறுத்துள்ளது. மேலும் விமான நிலையம்,விமான தளவாடங்கள் அமைக்கப்படுள்ள பகுதிகளை சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவை சிவப்பு நிற எல்லைகளாகவும், இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பிரிவுகளை 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவை ஆரஞ்சு நிற எல்லை பிரிவுகளாகவும்,15 முதல் 20 கிரோமீட்டர் தொலைவை பச்சை நிற பிரவுகளாகவும் கணக்கிட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகளை சாலை மார்க்கமாக எடுத்து சென்றால் சுமார் 40 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து சூழல் உள்ளது.

முக்கிய உடல் உறுப்புகள்

தற்போது போக்குவரத்து சூழல் மற்றும் நேரத்தைத்தை குறைக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. செங்கல்<wbr />பட்டு திருமணி பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக கூடுவாஞ்சேரி சுமார் 25 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் கூடுவாஞ்சேரி பகுதிக்கு சுமார் 15 முதல் 20 நிமிடத்தில் எடுத்து செல்லும் புதிய முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. சுமார் 200 மீட்டர் உயரத்தில் ட்ரோன் பறந்து மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகளை எடுத்து வருகின்றன.

அடுத்த சோதனை ஓட்டமானது வரும் மே மாதம் 3ம் தேதி நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டமானது முழுமையாக வெற்றிகரமாக நடைபெற்றால் அடுத்து இதயம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகள் எடுத்து செல்ல ஏதுவாக இருக்குமென கூறப்படுகிறது.