``கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss has urged the government to procure paddy bags.


காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம். குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்! தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உழவர்கள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு நெல் கொள்முதல் நிலையம்

அரசு நெல் கொள்முதல் நிலையம்
கோப்புப்படம்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் நெல் மூட்டைகளும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பாசன மாவட்டங்களில் 3 லட்சம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால், நெல்லை அறுவடை செய்த உழவர்கள் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது, கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது உள்ளிட்டவை தான் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вы хотите быстро и качественно оформить [url=https://karkasnye-doma-spb12.ru]каркасный дом под ключ в спб[/url], обращайтесь к проверенным специалистам. В итоге, такой…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed