கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு தங்கம்.. தடை தாண்டும் ஓட்டத்தில் இளைஞர் சாதனை..!


<p>ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.&nbsp;</p>
<p>அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.</p>
<p>&nbsp;</p>

Source link