காணாமல் போன மகன்…தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம்


சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
கஷங் நாலா பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்தார். காரில் இருந்த மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மட்டும் ஆற்றில் விழுந்து மாயமானார்.  இந்நிலையில் காணாமல் போன தனது மகன் பற்றிய தகவல் தெரிவித்தால் , ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என  சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும் காண

Source link