கலைத்துறையில் சாதனைப் படைத்த காஞ்சிபுரம் மாவட்டக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  தகவல்.

கலைஞர்களை சிறப்பிக்க விருது

தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும், அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது,   36 முதல் 50 வயது வரை கலைச்சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

யார்? யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

கலைஞர்கள் செய்ய வேண்டியது என்ன ?

விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம்– 631 502 என்ற முகவரிக்கு 19.01.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

மேலும் விவரம் வேண்டுவோர் இவ்வலுவலக தொலைபேசி எண்: 044-27269148 பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.

Source link

Latest News

View All

1. Кодирование от алкоголизма в Москве в центре «Мед Алко» проводится как часть комплексного лечения алкогольной зависимости. Наркологическая помощь направлена на…

2. Пациент может нуждаться не только в домашнем лечении, но и в госпитализации. Особенно внимательно оцениваются мужчины и женщины старшего возраста,…

3. Помогаем быстро перейти от консультации к конкретному плану: выезд, стационар или наблюдение. Узнать больше – https://vyvod-iz-zapoyaa-v-krasnoyarske17.ru/

4. Нарколога на дом часто вызывают при ухудшении самочувствия после алкоголя. Домашний прием позволяет врачу оценить человека в комфортных условиях, определить…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed