கரூர் வேம்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்


கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் சீருடை அணிந்தவாறு பால்குடம், தீர்த்த குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்து வேம்பு மாரியம்மனை மணமுருகி வழிபட்டனர். 
 

நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க பால் குடத் திருவீதி உலா ஜகவர் பஜார், மாரியம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், தின்னப்பா கார்னர், ரத்தனம் சாலை உள்ளிட்ட வழியாக வலம் வந்து பிறகு ஆலயம் வந்தடைந்தது. சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை வேம்பு மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
 
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு சுவாமி முத்து மாரியம்மன் காமதேனு வாகனத்திலும் பகவதி அம்மன் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா சென்றனர்.
 

 
பங்குனி சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்திலும், பகவதி அம்மன் சிம்ம வாகனத்திலும் மேள தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சுவாமியின் திருவீதி உலா புறப்பட்டது.
 

 
தொடர்ந்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு முத்துமாரியம்மன் காமதேனு வாகனமும், பகவதி அம்மன் சிம்ம வாகனமும் ஆலயம் வந்தடைந்தது. சுவாமி திருவீதி உலா விழாவை முன்னிட்டு கூடியிருந்த அனைத்து பக்தர்களும் சுவாமிகளை மனமுருகி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
 
 
 

மேலும் காண

Source link