கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தந்து வருகிறார். இந்நிலையில், பங்குனி உத்திரத்தின் முக்கிய நிகழ்வான சுவாமியின் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, கல்யாண பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சௌந்தரனாகி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,

அதன் தொடர்ச்சியாக பட்டாரை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலய வாசலில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகளை மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சுவாமிகளை தோளில் சுமந்தவாறு திருத்தேரில் கொழுவிக்க செய்தனர்.

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் திருத்தேரில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ச்சியாக மேளதளங்களுடன், வானவேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண பசுபதீஸ்வரர் பங்குனி மாத தேரோட்ட நிகழ்ச்சி ஆலய நான்கு மாட வீதி வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தனர்.

கரூவூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு கரூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Source link