சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

சிவசேனா கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே?

ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜக, ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் கூட்டு முயற்சியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.

கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அவர் தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியாது. மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வார்" என தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டேவையும் அவரை ஆதரித்து வரும் 38 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பு, மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்திருந்தனர். சமீபத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிராகரித்தார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அங்கீகரித்தார். இந்த நிலையில், சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை, வரும் 7ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே, இந்த மனு மீதான விசாரணை நடத்த வேண்டும் என இரு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
sports Betting predictions sites with early cash out
casas de Bono Apuestas Gratis Sin Deposito en venezuela
Для стильного интерьера идеально подойдут [url=https://www.dizaynerskiye-stoly.ru/]купить стол премиум[/url], которые подчеркнут вкус и статус владельца. Вот почему к подбору такого стола…
Дополнительная информация: https://www.gruzchiki-kiev.net
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன? | The Government of Nepal, which had refused international aid, has reversed that decision. | ACTPnews.com

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com

திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | ACTPnews.com

“மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com

Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com

black ops market link https://darknetmarketworld.com/