<p>இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நாட்டிற்கு பல வழிகளில் பலன்கள் ஏற்படும் எனவும் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. </p>
<p> </p>